CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!

CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!
News Image

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் விஜய் பெயரில் சிலர் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 6 புகார்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வட இந்தியா வரை பரவும் புகழ்

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். இளைய தலைமுறையினரால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் டெல்லி வரையிலான மக்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏராளமான வட இந்திய மக்களும் விஜயைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் முதலமைச்சர் விஜய் பெயரைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சத்தமில்லாமல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தகவலின்படி, “விஜய் அறக்கட்டளை என்ற பெயரில்  நிதி உதவி மற்றும் தொழில் தொடங்கும் மானியங்களை வழங்குவதாகக் கூறி அதற்கு  பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என இந்த மோசடியான நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பெயரில் மோசடி

இதில் ஈடுபடும் மோசடி நபர்கள் மக்களை தொலைபேசியில் அழைத்து நிதியுதவி மற்றும் சிறு வணிகங்கள் அல்லது ஸ்டார்ட்அப்களைத் தொடங்குவதற்கான நிதியை வழங்கும் விஜய்யின் தொண்டு நிறுவனத்துடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி நம்ப வைக்கின்றனர். கட்டணங்கள் என்ற பெயரில் ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை பெற்றதாக சொல்லப்படுகிறது. புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தூர் காவல்துறையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்லது.

நிதியுதவி, குறைந்த வட்டியில் கடன், பரிசுக்கூப்பன் என்ற பெயரில் மோசடி செய்து வந்த கும்பல் தற்போது மற்றொரு மாநிலத்தின் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி பலவிதமான ரீல்ஸ்கள் வைரலான நிலையில் அவர் பெயரிலான இந்த மோசடி அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க 1930 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் அழைக்கலாம். அதேசமயம் www.cybercrime.gov.in என்ற மத்திய அரசின் வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.எந்தவொரு அரசுத் திட்டம் அல்லது அறக்கட்டளை உங்களுக்குப் பணம் தருவதாகக் கூறினால் அதற்காக முன்கூட்டியே பணம் வசூலிக்காது என்பதை நினைவில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, பணம் பறிபோனாலோ உடனடியாக காவல்துறையை அழைத்து புகாரளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks