பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைமைப் பண்பு குறித்து பேசிய கருத்துகள் தற்போது தவெக ஆதரவாளர்களிடம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விஜய் சேதுபதியை தாக்கி சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி பேசியது என்ன?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கியது. 19 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டின் லீடராக ஷாத்திகா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ஷாத்திகா தலைவராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியதுடன், தலைமைப் பொறுப்பு குறித்து சில கருத்துகளையும் முன்வைத்தார்.

"தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சினைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு விலகுவது தலைவருக்கான தகுதி அல்ல" என விஜய் சேதுபதி தெரிவித்தார். "தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனது முடிவுகளுக்கும், அந்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்" என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

தவெக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

இந்தப் பேச்சு ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் கருத்துகளை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. குறிப்பாக தலைமை, வாக்குறுதி, பொறுப்பு ஆகிய வார்த்தைகளை அடிப்படையாக வைத்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஆனால் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எந்த அரசியல் தலைவர் அல்லது அரசியல் அமைப்பின் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இதனால் தவெக ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்த்ல் விஜய் சேதுபதியை விமர்சித்தும் அவரை தாக்கியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்

விஜய் தொலைக்காட்சி விளக்கம்

இந்த அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலைக்காட்சி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிக் "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், உணர்வுகள், எதிர்வினைகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ச்சியின் கட்டமைப்புக்குள் நடைபெறும் பொழுதுபோக்கு அம்சங்கள், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்த நபர், அமைப்பு அல்லது அரசியல் சூழலுடனும் தொடர்புபடுத்தக் கூடாது" என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், விஜய் சேதுபதியின் கருத்துரிமையை பாதுகாக்க சட்ட ரீதியாக துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய தலைமைப் பண்பு தொடர்பான விவாதம் தற்போது அரசியல் தளத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

Source: Read Full Article