விதைப்பும் நடவும் வேகம்... மின்சாரம் மட்டும் ‘கட்’! தஞ்சை கிராமங்களில் தொடரும் அதிர்ச்சி

விதைப்பும் நடவும் வேகம்... மின்சாரம் மட்டும் ‘கட்’! தஞ்சை கிராமங்களில் தொடரும் அதிர்ச்சி
News Image

தஞ்சாவூர்: சாகுபடி பணிகளுக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பகுதி கிராமங்களில் அறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் ‘பவர் கட்’டால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் தினமும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பம்ப்செட் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வரும் விவசாயிகள், திடீர் மின்தடையால் சாகுபடி பணிகளை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடி பணிகளுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் பாசன நீர்நிலைகளை நம்பியுள்ள விவசாயிகள் வயல்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். இதனுடன், பம்புசெட் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஏற்கனவே சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளும் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து மின்சாரம் கிடைப்பது மிகவும் அவசியமாக உள்ளது. வயல்களில் தண்ணீர் பாய்ச்சுதல், உழவு பணிகள், நாற்றங்கால் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மின்மோட்டார்களின் செயல்பாட்டை சார்ந்தே நடைபெறுகின்றன.

இந்நிலையில், கிராமப்புறங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தஞ்சை அருகே உள்ள எட்டாம் நம்பர் கரம்பை, கல்விராயன்பேட்டை, பூதலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் தினமும் பல்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், சில நேரங்களில் நள்ளிரவு நேரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பின்னி அடிக்கடி பவர்கட் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சில பகுதிகளில் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் மின்தடை, சில சமயங்களில் 2 முதல் 3 மணி நேரம் வரையும் நீடிப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பகல் நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் வீடுகளில் மின்சாதனங்களை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேர மின்தடை காரணமாக மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆனால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு இதைவிட அதிகமாக உள்ளது. வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கும் நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால், ஏற்கனவே மேற்கொண்டிருந்த பாசனப் பணிகள் பாதியில் நிற்கின்றன.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘‘மின்சாரம் எந்த நேரத்தில் நிறுத்தப்படும், எப்போது மீண்டும் வரும் என்பது தெரியவில்லை. அறிவிக்கப்பட்ட பராமரிப்பு மின்தடையாக இருந்தால் அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட முடியும். ஆனால், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வயலில் தண்ணீர் பாய்ச்சும் பணிகளை திட்டமிட முடியவில்லை’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், மின்சாரம் வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, விவசாயிகள் தூக்கத்தை இழந்து மின்சாரம் வரும் நேரத்தில் மோட்டாரை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயப் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வருகின்றன. இத்தகைய நேரத்தில் அறிவிப்பின்றி தொடர்ந்து மின்தடை ஏற்படுவது சாகுபடி பணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. மின்வாரியத்தில் அவசர பராமரிப்பு பணிகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சாரம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகள் தங்களது பாசனப் பணிகளை அதற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனவே தஞ்சை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் ஏற்படும் தொடர் மற்றும் அறிவிக்கப்படாத மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாகுபடி காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பகல் நேரத்தில் பவர் கட்  ஏற்பட்டாலும் சமாளித்து விடலாம். இரவு நேரத்தில் திடீர் திடீரென்று நிறுத்தப்படுகிறது. மேலும் தெருவிளக்குகளும் எரிவதில்லை. தஞ்சாவூர் – வண்ணாரப்பேட்டை- ஆலக்குடி, பூதலூருக்கு முக்கிய வழித்தடமாக 8ம் நம்பர் கரம்பை உள்ளது. இரவு நேரத்தில் பணி முடித்து வருபவர்கள் தெருவிளக்குகள் இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப்புறங்களில் அடிக்கடி ஏற்படும் பவர் கட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks