விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து, மழைக்காலங்களில் அதிகளவு நீரை சேமித்து வைக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் மேல்மலையனூர் ஒன்றியம் கடலி ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மீள் நிரப்பு குழாய் அமைக்கும் பணியினையும், கடலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது நிதி திட்டத்தின் கீழ் பழுதுபார்த்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினையும், கன்னலம் ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கருமந்தாங்கல் ஏரிக்கு செல்லும் தொணி ஓடை வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணியினையும், துரிஞ்சிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சித்தேரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் ஊராட்சியில் வட்டார வளமிகு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கன்னலம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேல்மலையனூர் ஒன்றியத்திற்கு வட்டார வளமிகு வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்டையில், மேல்மலையனூர் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலை மேம்படுத்துவதற்கு கன்னலம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வளத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் உடற்கல்வித்திட்டம் கீழ் ஓடி விளையாடு உடற்கல்வியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளின் உடற்கல்வி தொடர்பாக பயிற்சி குறித்து கேட்டறியப்பட்டதோடு, மாணவர்களுக்கு பல்வேறு உடற்கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமிகு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளின் இரத்தசோகை, வாய் சுகாதாரம் தடுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு இரத்தசோகை, வாய் சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து மருத்துவர்கள், ஆசிரியகர்களிடம் கேட்டறியப்பட்டது.

சுய தொடர்ந்து, மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி, கமலேஷ்வரி உதவிக்குழுவினரின் சணல் பைகள் மற்றும் தாம்பூல பைகள் தயாரிக்கும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுய உதவிக்குழுவினர்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை, தரம், மூலப்பொருள் போன்றவைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, தொழில் மையத்தின் மூலம் வங்கி கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Source: Read Full Article