துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய கிழக்கு மண்டல அணிக்காக அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷக்ரா 101 ரன்களும் எடுக்க கிழக்கு மண்டல அணி 708 ரன்கள் விளாசி ஆல் அவுட்டானது.

படிக்கல் நிதான ஆட்டம்:

கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் இமாலய இலக்கை குவித்த நிலையில், முதல் இன்னிங்சை தொடர்ந்த தெற்கு மண்டலம் தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ரிக்கி புய் 1 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஜெகதீசன் - தேவ்தத் படிக்கல் ஜோடி சற்று நிதானம் காட்டியது.

இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடினார். ஜெகதீஷன் 32 ரன்னில் அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த ஷைக் ரஷீத் சற்று நிதானம் காட்டினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய தேவ்தத் படிக்கல் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். மறுமுனையில் ஷைக் ரஷீத் நிதானம் காட்டிய நிலையில் அவர் 27 ரன்களில் அவுட்டானார்.

போராடும் திலக் வர்மா:

பின்னர், கேப்டன் திலக் வர்மாவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடிய தேவ்தத் படிக்கல் 104 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். படிக்கல் ஆட்டமிழந்த பிறகு தெற்கு மண்டலம் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. அடுத்து வந்த ஸ்மாரன் 55 பந்துகளில் 23 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் கோபால் திலக் வர்மாவிற்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். ஒத்துழைப்பு அளித்த ஸ்ரேயாஸ் கோபால் 55 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா அரைசதம் அவுட்டானார்.

466 ரன்கள் பின்தங்கிய தெற்கு மண்டலம்:

தெற்கு மண்டல அணி 80 ஓவர்களில் 242 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. கிழக்கு மண்டல அணிக்கு முகமது ஷமி, முகேஷ்குமார், கொனைன் குரோஷி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி, முகேஷ் குமார் அசத்தலாக பந்துவீசி வருகின்றனர். இருவரும் இணைந்து தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தெற்கு மண்டலம் அணி கிழக்கு மண்டல அணியை விட 466 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ள நிலையில், திலக் வர்மா மட்டுமே 56 ரன்களுடன் ஆடி வருகிறார். பின்வரிசையில் மிலிந்த், திரிபுனா விஜய், முகமது சிராஜ் மற்றும் நிதிஷ் மட்டுமே உள்ளனர்.

Source: Read Full Article