தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!

தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
News Image

சென்னை: தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள தொழில் பழகுநர் (Apprenticeship) பயிற்சி இடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிக்கையில் தமிழக இளைஞர்களுக்கான முன்னுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,

தெற்கு ரயில்வேயின்  தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில்    தொழில் பழகுனர்கள் (Apprenticeship) பயிற்சிக்காக 6,171  தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க  தெற்கு ரயில்வே  முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை,  கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை  ஆகிய இடங்களில்  6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன.  அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிக்கையில் தான்  விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

22.07.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984- தேதியிட்ட  தொழில் பழகுனர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால்,  இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில்  நியமிக்கப்படுவதற்கு  எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என  2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.

ஆனால், இந்த  விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.

கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே  தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுனர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளை  பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை  தெற்கு ரயில்வே உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை  தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம்  தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks