தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள், 50 விழுக்காடு மானியத்துடன் பயன்பெற உரிய ஆவணங்களுடன் வருகின்ற 25.09.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோரை கண்டறிந்து அவர்களை பண்ணைகள் நிறுவிட ஊக்குவிக்கும் பொருட்டு 2026-27ம் ஆண்டிற்கான கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3 அலகுகளுக்கு கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் கொண்டவராகவும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட சொந்தமாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருத்தல் வேண்டும், அந்நிலமானது, அப்பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீர் நிலைகளிலிருந்து விலகியும் இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வுதெடுக்கப்பட்ட பயனாளிகளாகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்ந்த திட்டங்களின் கீழ் பயனடைந்திருத்தல் கூடாது. 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளித்திடல் வேண்டும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேசியமய மாக்கப்பட்ட, திட்டமிடப்பட்டவங்<wbr />கி கூட்டுறவுவங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது தனது சொந்த முதலீடு செய்ய முன் வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான அவரது நிதிதிறன்களின்ஆதாரம் சான்று அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் / இதர ஆவணங்கள்), 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதி மொழி, 2023-2024 மற்றும் 2024-25, 2025-26 ஆம் ஆண்டுகளில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்திடல் வேண்டும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள், தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் வருகின்ற 25.09.2026ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Source: Read Full Article