அரசுப் பணத்தில் ஸ்டாலின் குடும்பமே சொகுசு சுற்றுலா.. நீங்க பேசலாமா?.. திமுகவை வெளுத்து வாங்கிய தவெக!

அரசுப் பணத்தில் ஸ்டாலின் குடும்பமே சொகுசு சுற்றுலா.. நீங்க பேசலாமா?.. திமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
News Image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது பற்றி திமுக ஐடி விங் விமர்சனம் செய்ததற்கு தவெக ஐடி விங் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு சென்னையில் இருந்து துபாய் வழியாக அவர் லண்டன் சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட குழுவும் சென்றுள்ளது. இந்த குழுவானது செப்டம்பர் 17ம் தேதி சென்னை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகும்.

ஆனால் முதலமைச்சர் விஜய் விமானப் பயணம் மேற்கொள்வதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் தகவல்கள் வெளியிடப்பட்டது. இத்தகைய நடைமுறையை திமுக ஐடி விங் கடுமையாக விமர்சனம் செய்தது. அதாவது, “கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்!

ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை. அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அவரது நண்பா நண்பிகளுடன் பயணம் போகிறாரா?” என கேள்வியெழுப்பியிருந்தது.

அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலா

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக ஐடி விங், “நாடக கம்பெனி திமுக! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!

2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு? துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும். அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!

பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே! போட்டோஷூட் நடத்துவதும், சூரிய உதயம் பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!

சரி…வெளிநாடு முதலீடா? இல்லை… வெளிநாட்டில் முதலீடா? கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?” என சரமாரியாக விமர்சனம் செய்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks