விறுவிறுப்பாக நடக்கிறது குறுவை அறுவடை... கொள்முதலை விரைவுப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

விறுவிறுப்பாக நடக்கிறது குறுவை அறுவடை... கொள்முதலை விரைவுப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
News Image

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிகாடு பகுதியில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், வயல்களில் அறுவடை இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

உள்ளூர் தேவையை சமாளிக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நவீன அறுவடை இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முக்கியமான பருவமாகும். குறிப்பாக தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆண்டுதோறும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், தற்போது அறுவடை பருவம் தொடங்கியுள்ளது.

வேங்கராயன் குடிகாடு பகுதியில் வயல்களில் நெற்கதிர்கள் முற்றியுள்ளதால், அறுவடை பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை, அறுவடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட காரணங்களால் இயந்திர அறுவடைக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. வயலில் நெற்கதிர்களை அறுத்து, அதிலிருந்து நெல்லை பிரித்தெடுத்து, வைக்கோலை தனியாக வெளியேற்றும் வகையில் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.

இதனால், வழக்கமாக அதிக நாட்கள் தேவைப்படும் அறுவடை பணிகளை குறுகிய காலத்திலேயே முடிக்க முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறுவை அறுவடை காலத்தில் மழை பெய்தால் வயலில் முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்து பாதிக்கப்படுவதுடன், அறுவடை பணிகளும் தாமதமாகும். மேலும், வயல்களில் தண்ணீர் தேங்கினால் இயந்திரங்களை பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படும்.

இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் பணிகளை விரைவாக முடிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு பகுதியில் அறுவடை இயந்திரங்கள் பணியை முடித்ததும், அடுத்தடுத்த வயல்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறுவை அறுவடை முடிந்ததும் பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் குறுவை அறுவடை பணிகளை விரைந்து முடிப்பது விவசாயிகளுக்கு மிகவும் அவசியமாக உள்ளது. அறுவடைப்பணிகளை விரைந்து முடித்தால்தான் வயலை மீண்டும் உழுது தாளடி சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலும் என்பதால் விவசாயிகள் மிகவும் தீவிரமாக அறுவடைப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்;.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்துதல், மூட்டைகளில் சேமித்தல், அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். வேங்கராயன் குடிகாடு பகுதியில் தற்போது வயல்களில் இயந்திரங்களின் சத்தம் ஒலிக்க, மறுபுறம் அறுவடை செய்யப்பட்ட நெல் குவியல்கள் கண்ணில் படுகின்றன. டெல்டா விவசாயிகளின் உழைப்புக்கு கிடைக்கும் பலனை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டமாக குறுவை அறுவடை பருவம் அமைந்துள்ளதால், நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் குறுவை சாகுபடி முடித்து அறுவடைப்பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்தால் எவ்வித தாமதமும் இன்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காத்திருக்க வைக்கும் நிலை ஏற்படாது. கொள்முதல் விஷயத்தில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks