பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விவாதமாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கியது. 19 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டின் லீடராக ஷாத்திகா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ஷாத்திகா தலைவராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியதுடன், தலைமைப் பொறுப்பு குறித்து சில கருத்துகளையும் முன்வைத்தார்.

"தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சினைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு விலகுவது தலைவருக்கான தகுதி அல்ல" என விஜய் சேதுபதி தெரிவித்தார். "தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனது முடிவுகளுக்கும், அந்த முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்" என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதில்

இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதற்கு அமைச்சர் ரமேஷ் இடைத்தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். " தேர்தலில் போட்டியிடுவது என்பது அனைவரது ஜனநாயக உரிமை. யாரும் அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. தேர்தலைப் பொறுத்தவரை முதல்வர் விஜயின் நல்லாட்சியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கிறது. முதலவர் விஜயின் நல்லாட்சியை மக்கள் சிறப்பாக பாராட்டி வருகிறார்கள். நிச்சயமாக நாங்கள் தான் வெற்றிபெறுவோம்" என்று தெரிவித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் தலைமைத்துவம் பற்றிய கருத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது. அவர் " நேரடியாக பதிலளிக்காமல், அரசியல் தொடர்பாக வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன் " என்று தெரிவித்தார்

Source: Read Full Article