கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு

கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு
News Image

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல் மணிகளை 15 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் குவித்து வைத்து வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு, சொக்கலை, கா.புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், இந்தாண்டு பம்புசெட் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்போது பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு வயல்களில் அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பருவநிலை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில், பம்புசெட் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொண்டனர். வயல்களில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரானதைத் தொடர்ந்து, விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை கொண்டு வந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக விற்பனை செய்யும் நோக்கில், விவசாயிகள் கண்டிதம்பட்டில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், கொள்முதல் பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மணிகளை குவியலாக கொள்முதல் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து குவித்து வைத்து, கொள்முதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கண்டிதம்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை 15 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்து காத்திருக்கின்றனர்.

ஒருபுறம் வயல்களில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருப்பதால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளையும் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையத்தில் நீண்ட நாட்களாக நெல் மணிகள் குவிந்து கிடப்பதால், திடீரென மழை பெய்தால் நெல் நனைந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட நேரிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக உழைத்து, விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, பாசனம், அறுவடை என பல்வேறு செலவுகளை செய்து விளைவித்த நெல்லை பாதுகாப்பாக விற்பனை செய்வதில் ஏற்படும் தாமதம் தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கூறப்படு.

இதனால் கண்டிதம்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து வரும் நெல் மூட்டைகளையும் தாமதமின்றி கொள்முதல் செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்து, விவசாயிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கண்டிதம்பட்டு கிராமத்தில் பம்ப்செட் வாயிலாக குறுவை சாகுபடி செய்து தற்போது அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடைசெய்த நெல்லை குவித்து வைத்து காத்திருக்கிறோம். மழை வேறு அவ்வபோது பெய்வதால் நெல் மணிகள் நனைந்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இன்னும் பல விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனர். பெரிய அளவில் பெய்தால் அறுவடை செய்யப்படாமல் உள்ள வயல்களில் பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks