<p>தமிழக சட்டப்பேரவை இன்று கூடுவதற்கு முன்னதாகவே முதல்வர் விஜய் சட்டப்பேரவைக்கு வந்து அனைவருக்கும் தன் பாணியில் வணக்கம் வைத்தார். பின்னர் சபாநாயகர் வந்து பேரவையை தொடங்கி வைத்ததும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து பேச வேண்டும் என்று திமுகவினர் முழக்கமிட்டனர். ஆனால், அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி அளிக்காத நிலையில், திமுகவினர் எழுந்து நின்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட்டு வருகின்றனர்.</p>
Source: Read Full Article