இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் பணிகள்

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புத்தேந்தல் ஊராட்சி, மல்லிகை நகர் பகுதியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றுவதுடன், மீண்டும் கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெருமானேந்தல் மற்றும் அச்சன்குடி பகுதியில், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் தொகுப்பு 2-ன் கீழ், 250 மி.மீ. விட்டமுள்ள OPVC குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழாய் பதிக்கும் பணியின் தற்போதைய நிலை, பணியின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு.

மேலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பணிச்சக்குடி ஊராட்சி, நெடுமரம் கிராம மக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு. ஊரணியின் தற்போதைய நிலை, நீர்வரத்து, நீர்த்தேக்கத்தின் நிலை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஊரணியை முறையாகப் பராமரித்து, மழைக்காலங்களில் நீரைச் சேமிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சிவகங்கை நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (சிவகங்கை), உதவி நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர், நெடுஞ்சாலை பராமரிப்பு பொறியாளர்(NHAI), திருவாடனை வட்டாட்சியர் திரு.தாமஸ் யூரிக் ககாரீன் அவர்கள், திருவாடனை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.விஜி அவர்கள், திரு.ஜெயமுருகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article