உயிரைப் பறித்த பஜ்ஜி? - பெரியபாளையத்தில் சிறுமி உயிரிழந்த சோகம் - நடந்தது என்ன?

உயிரைப் பறித்த பஜ்ஜி? - பெரியபாளையத்தில் சிறுமி உயிரிழந்த சோகம் - நடந்தது என்ன?
News Image

பெரியபாளையம் அருகே பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த லட்சிவாக்கம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்ரீத்திகா (09) என்கிற மகள் உள்ள நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி தண்டலம் பகுதியில் உள்ள ஒரு பஜ்ஜி கடையில் சிறுமி ஸ்ரீத்திகா பஜ்ஜி சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஸ்ரீத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமிக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks