பெரிய ஸ்டார் ஓட பையன் என்ற விஷயம் கூட ஜேசன் சஞ்சய் தம்பியிடம் பார்க்க முடியாது - நடிகர் சூரி நெகிழ்ச்சி!

பெரிய ஸ்டார் ஓட பையன் என்ற விஷயம் கூட ஜேசன் சஞ்சய் தம்பியிடம் பார்க்க முடியாது - நடிகர் சூரி நெகிழ்ச்சி!
News Image

இவ்வளவு பெரிய ஸ்டார் ஓட பையன் என்ற விஷயம் கூட ஜேசன் சஞ்சய் தம்பியிடம் பார்க்க முடியாது, சஞ்சய் தம்பி கிட்ட அவ்வளவு ஒரு தெளிவு உள்ளது. பணிவு இருக்குது, நிதானம் இருக்கிறது, கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வருவார். எதிர்காலத்தில் அவர் சொன்ன மாதிரி கண்டிப்பா அவர் கூட ஒரு படம் பண்ணலாம் - மதுரையில் நடிகர் சூரி பேட்டி.

நடிகர் சூரி பேட்டி

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மண்டாடி படக்குழுவினர் ஒவ்வொரு மாவட்டம் மாறியாக திரையரங்கம் சென்று ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி மற்றும்  படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சுகாஷ், படத்தின் இயக்குனர் ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கத்திற்கு திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக வருகை தந்தனர். சூரியை பார்த்தவுடன் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மண்டாடி திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர். தெலுங்கு சினிமாவில் முக்கியமான ஹீரோவாக இருப்பவர்  சுகாஷ் நமக்காக படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். மதுரை மக்களுக்கு மிக்க நன்றி, மன்டாடி படம் திரைக்கு வந்த நாளிலிருந்து இப்போது வரை ஹவுஸ்புல் காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது ஒரு வருட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

புரோட்டா சூரி என்று ஒன்று இல்லவே இல்லை சூரி தான் என் பெயர்

புரோட்டா சூரி என்று ஒன்று இல்லவே இல்லை. சூரி தான் என் பெயர். நகைச்சுவை நடிகனாக இருந்து கதை நாயகனா மாறி இப்போது கதாநாயகனாக மாறி உள்ளேன். மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த வைத்துள்ளனர்.

என்ன கையை பிடித்து கூட்டி வந்த என்னுடைய அத்தனை இயக்குனர்களுக்கும் நன்றி. அயலான் திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் படத்தில் நடிக்க உள்ளேன். முழுமையான ஒரு மதுரை சார்ந்த கதையில் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். விரைவில் நடிப்பேன், என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக மன்டாடி அமைந்துள்ளது.

அனைவரும் பாராட்டுகிறார்கள்

மகிழ்ச்சி இந்த படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மக்கள் என அனைவரும் பாராட்டுகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும் படப்பிடிப்பின் போது கடலில் கீழே விழுந்தது, படகிலிருந்து கீழே விழுந்தது நல்ல வலிச்சது. படப்பிடிப்பில் பல அடிகள் விழுந்துள்ளது. கல்யாண போட்டா பார்ப்பது போல இது நேத்து கீழே விழுந்தது இது முந்தா நேத்து கீழே விழுந்தது என படப்பிடிப்பில் ஏற்பட்ட அடிகளை ஜெராக்ஸ் எடுத்து தான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு பல காயங்கள் இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்டது. ஆனால் அந்த வலி எல்லாம் படம் வெளியான பின் மகிழ்ச்சியாக மாறியது.

பெரிய ஸ்டார் ஓட பையன்

இவ்வளவு பெரிய ஸ்டார் ஓட பையன் என்ற சின்ன விஷயம் கூட சஞ்சய் தம்பியிடம் பார்க்க முடியாது சஞ்சய் தம்பி கிட்ட அவ்வளவு ஒரு தெளிவு உள்ளது. பணிவு இருக்குது நிதானம் இருக்கிறது. கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்திற்கு வருவார்  எதிர்காலத்தில் அவர் சொன்ன மாதிரி கண்டிப்பா அவர் கூட ஒரு படம் பண்ணலாம்.  ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மிக பெரிய விருது என்றால் அது ரஜினி சாரிடம் வாழ்த்து வாங்குவது. விடுதலை படத்தை பார்த்து வாழ்த்து சொன்னார். தற்போது மன்டாடி திரைப்படத்தை பார்த்து வாழ்த்து சொல்லியுள்ளார். இது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த டிரஸ் அந்த டிரஸ் எல்லாம் இல்லை நான் எப்பவும் மனிதன் தான் சூரிக்கு எந்த டிரஸ் போட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பான்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks