பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

பயணம் தொடங்கும் முன் டிப்ஸா? - ஓலா, ரேபிடோ, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
News Image

பயணம் தொடங்கும் முன் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் டிப்ஸ் பெறும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  பைக்-டாக்ஸி செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகரிக்கும் பைக் - ஆட்டோ- கார் டாக்ஸி சேவைகள்

ஒரு காலத்தில் பயணம் மேற்கொள்ள ஆட்டோ, கார் என இருந்த சமூகம் காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொண்டு வந்து விட்டது. பைக் டாக்ஸி சேவைகள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் டாக்ஸி சேவைகள் மத்திய, மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் இதுதொடர்பாக கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பைக், கார், ஆட்டோ போன்ற டாக்ஸி சேவைகளை ஓலா, உபெர், ரேபிடோ போன்ற செயலிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனங்களின் செயலிகளை லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நகரங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

டிப்ஸ் கொடுத்தால் உடனடி சேவை

இப்படியான நிலையில் நாம் இந்த செயலி மூலம் பைக், ஆட்டோ, கார் போன்ற சேவைகளை அழைக்கும்போது முன்பெல்லாம் டிப் கொடுப்பது வாடிக்கையாளரின் விருப்பமாக இருந்தது. ஆனால் தற்போது அதிகரிக்கும் தேவைகளால் இந்த சேவையை அழைக்கும்போது உடனுக்குடன் கிடைப்பது என்பது இயலாத காரியமாக மாறி விட்டது. இதற்கு ஒரே நேரத்தில் அதிக பேர் அழைப்பதால் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என சொல்லி விட முடியாது.

தற்போது இந்த வாடகை வாகனங்களுக்கான செயலியில் பயணம் மேற்கொள்ளும் இடத்தை தெரிவித்தவுடன் குறிப்பிட்ட தொகை காட்டும். அதன்கீழ் மேற்கொண்டு ரூ.10, ரூ.20, ரூ.50 போன்று டிப் வழங்கினால் உடனடியாக சேவை கிடைக்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒருவேளை இதனை நீங்கள் தேர்வு செய்யாமல் முதலில் காட்டும் தொகைக்கே பயணம் மேற்கொள்ள் நினைத்தால் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு எனவும் சொல்லப்படுகிறது. இதனால் கூடுதலாக ரூ.10, ரூ.20 கொடுத்து மக்கள் நொந்துக்கொண்டே பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

நுகர்வோர் ஆணையத்தில் புகார்

இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் பயணத்தை முன்பதிவு செய்வதற்கு முன்பு ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்கும் விருப்பத்தை வழங்கும் ஆப்ஷனை நிறுத்துமாறு ஓலா, உபெர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான நிதி கரே உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை தவறான வழிகாட்டுதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறீயுள்ளார். டிப்ஸ் என்பது வாடிக்கையாளர் விருப்பப்பட்டு கொடுப்பது, அதனை அவர்கள் விருப்பத்திற்கே விட வேண்டும். சில தினங்களுக்கு முன்பு நுகர்வோரை ஏமாற்றும் முறைகளை பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் ரேபிடோவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks