பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ஆல் அவுட்:

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டனாக களமிறங்கிய பாபர் அசாம் முதல் இன்னிங்சில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக ஜொலித்து வந்த பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒரு காலத்தில் ஒப்பிட்டு வந்தனர்.

படுமோசத்தில் பாபர் அசாம்:

ஆனால், சமீபகாலமாக அவரது செயல்பாடு என்பது மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. பாபர் அசாம் தனது கடைசி 10 டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த ரன்கள்

1. 14 ரன்கள் ( வங்கதேசத்திற்கு எதிராக)

2. 68 ரன்கள் ( வங்கதேசத்திற்கு எதிராக)

3.47 ரன்கள் ( வங்கதேசத்திற்கு எதிராக)

4. 23 ரன்கள் ( வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக)

5. 58 ரன்கள் ( வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக)

6. 24 ரன்கள் ( வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக)

7. 88 ரன்கள் ( வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக)

8. 8 ரன்கள் ( இங்கிலாந்துக்கு எதிராக)

9. 6 ரன்கள் ( இங்கிலாந்துக்கு எதிராக)

10. 7 ரன்கள் ( இங்கிலாந்துக்கு எதிராக)

இதில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 58 ரன்கள, 24 ரன்கள் மட்டுமே ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். கடந்த 10 இன்னிங்சில் 3 அரைசதம் மட்டும் விளாசியுள்ளார். அதுவும் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்திற்கு எதிராக வந்தது ஆகும்.

ஒற்றை இலக்கம்:

இங்கிலாந்து மண்ணில் இவர் கடைசியாக ஆடிய 3 இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளார். பாபர் அசாம் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 66 போட்டிகளில் 121 இன்னிங்சில் ஆடி 9 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 6 சதங்கள் பாகிஸ்தானிலே வந்தது. 1 சதம் இலங்கையிலும், 1 சதம் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வந்தது. எஞ்சிய ஒரு சதம் ஆஸ்திரேலிய மண்ணில் வந்தது.

இங்கிலாந்து மண்ணில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பாபர் அசாம் இதுவரை 1 சதம் கூட விளாசியதே இல்லை. 3 முறை அரைசதம் விளாசியுள்ள பாபர் அசாம் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் 284 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அவரது சராசரி 40.57 ஆகும். ஆனால், கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

வெளிநாட்டு மண்ணில் தடுமாற்றம்:

விராட் கோலியுடன் ஒரு காலத்தில் ஒப்பிடப்பட்ட பாபர் அசாம் தொடர்ந்து மோசமாக ஆடி வருவதும் குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவதும் அந்த நாட்டு ரசிகர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. ரசூல்லா 2 விக்கெட்டையும், முகமது அப்பாஸ் மற்றும் முகமது அலி தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Source: Read Full Article