பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
News Image

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக புதிய தலைமைச்செயலகம் கட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதனையடுத்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும் எனவும் அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிஎம் விஜய் திட்டத்திற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் புதிய தலைமைச்செயலகம் கட்டிடம் கட்டும் முதலமைச்சர் விஜய திட்டத்திற்கு எதிராக களத்தில் இறங்க பட்டினப்பாக்கம் மீனவ கிராமங்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட உள்ள பகுதியை சுற்றி முள்ளிக் குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம்,இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிக்குள் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் பட்சத்தில் தங்களது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என மீனவ கிராமங்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான நிலையில்,  தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தவும் வருகிற 15.09.2026 அன்று சீனிவாசபுரத்தில் அனைத்து மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை - மீனவ மக்கள் போராட்டம்

இந்த ஒன்பது கிராம ங்கள் தவிர பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரசு மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இதனிடையே பட்டனிப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு பாமக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

புதிய தலைமைச்செயலகம்- அன்புமணி எதிர்ப்பு

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks