கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!

கடன் வாங்கி ரூ.48 லட்சம் செலவு.. பரிசாக கார்.. காதலில் திளைத்த பெண்.. கம்பி நீட்டிய காதலன்!
News Image

ஆந்திர மாநிலத்தில் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் ஏமாற்றியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள குரபாலக்கோட்டை மண்டலத்திலுள்ள அங்கல்லு புறக்காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அந்த பெண் சில தினங்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் கடுமையாக போராடி அந்த பெண்ணின் உயிரைக் காத்த நிலையில் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது. அதாவது இந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள ராம்நகரைச் சேர்ந்தவர். 29 வயதான அப்பெண் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே ஒரு திருமண நிகழ்ச்சி மூலம் குராபாலகோட்டா மண்டலத்தின் ஸ்ரீராமூலபள்ளியைச் சேர்ந்த நரேஷை அந்த பெண் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய உறவு பின்னாளில் காதலாக மாறியது. நரேஷ் சீரியல்களில் நடித்து வந்ததால் அடிக்கடி ஹைதராபாத்துக்கு வருவது, அப்போது இருவரும் சந்தித்து பேசுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நரேஷை மகிழ்விக்க அப்பெண் ஒரு கார் ஒன்றை லோன் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுவரை சுமார் ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நரேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை கேட்டும் சமாளித்தும் வந்திருக்கிறார். இந்த நிலையில் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நரேஷ் மற்றொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்வதை அறிந்ததால் முடிவேடு காவல் நிலையத்தில் அப்பெண் புகாரளித்தார்.

ஆனால் ஓராண்டாகியும் போலீசார் அந்த புகாரை கண்டுக் கொள்ளாமல் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அப்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks