நள்ளிரவில் மாஸ் பிளான் போட்ட 3 இளம் பெண்கள் !! ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு !!

நள்ளிரவில் மாஸ் பிளான் போட்ட 3 இளம் பெண்கள் !! ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு !!
News Image

பழங்கால பொருட்கள் அருங்காட்சியகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் , இடலாக்குடி தெருவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் நினைவு அருங்காட்சியகம் ஒன்று நடத்தி வருகிறார். இதில் பழங்கால பொருட்களை சேகரித்து காட்சிக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் அருங்காட்சியகத்துக்கு முகமது அலி வந்த போது உள்ளே இருந்த பழங்கால பித்தளை மற்றும் கலை பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் என கூறப்படுகிறது. அருங்காட்சியகத்தின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டு இருந்தது. எனவே மேற்கூரையை பிரித்து மர்ம நபர் உள்ளே நுழைந்து பொருட்களை திருடி இருக்கலாம் என கருதிய முகமது அலி உள்ளே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு - 3 பெண்கள் கைது

அப்போது பெண்கள் மூவர் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பொருட்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து முகமது அலி , கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மூன்று பெண்களை கைது செய்தனர். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த பகவதி ( வயது 28 ) , நாகர்கோவில் ஓழுகினசேரி பகுதியை சேர்ந்த நந்தினி ( வயது 22 ) , அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி ( வயது 24 ) ஆகிய மூவரை கோட்டார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks