ஏழை எளிய மக்களுக்கு ஜாக்பாட்

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஆனால், ஏழை, எளிய மக்கள் கையில் உரிய பணம் இல்லாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதி வழங்கிடும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டமும், மற்றொரு திட்டமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டமுமாகும்.

25 ஆயிரம் வீடு கட்ட அனுமதி

இந்த நிலையில் தற்போது பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்தது. 2024ம் ஆண்டு பிரதமரின் வீட் டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வீடு கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் நாடு முழுதும், 5,206 நகரங்களில், சுமார் 71.55 லட்சம் வீடுகள் சுட்ட மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 300 சதுர அடி பரப்பளவில் 25 ஆயிரம் வீடுகள் 722 நகரங்களில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கான மொத்த செலவில் 2.50 லட்சம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்கவுள்ளது. மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டங்களில் வீடுகள் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது.? விண்ணப்பிப்பது எப்படி.? என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தற்போது பார்க்கலாம்.

தகுதி : எந்த இடத்திலும் சொந்தமாகப் நிலையான வீடு இருக்கக்கூடாது.

வருமானம்: பொருளாதாரத்தில் பின் தங்கியோர், நடுத்தர வருமானம் பிரிவினர் புதிய PMAY-U 2.0 விதிகளின்படி ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் முதல் ரூ. 9 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் தகுதியுடையவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கட்டாயம் : ஆதார் எண் மற்றும் PAN எண் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

அரசின் சலுகை : கடந்த காலத்தில் மத்திய அரசின் வேறு எந்த வீட்டு வசதித் திட்ட உதவிகளையும் பெற்றிருக்கக் கூடாது

விண்ணப்பிக்கும் முறை

இணையதளத்தில் PMAY-Urban Portal அல்லது UMANG PMAY-U என்ற தளத்திற்கு செல்லவும்.

"Slum Dwellers" அல்லது "Benefits under other three components" என்பதில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் எண் உள்ளிட்டு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்திற்குச் செல்லவும்.

பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு மற்றும் வருமான விவரங்களை உள்ளிடவும்.ஆவணங்கள் பதிவேற்றம் செய்யவும்.

தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு Captcha குறியீட்டை உள்ளிடவும்.

இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும், எதிர்கால பயன்பாட்டிற்குப் படிவத்தின் பிரிண்ட் தேவைப்படும்.

Source: Read Full Article