Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Watch Video:  ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
News Image

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்திய அணி இலங்கை கிரிக்கட் லெவனுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 363 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி படிக்கல்லின் அபார சதத்தால் 357 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

207 ரன்கள் டார்கெட்:

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 200 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணிக்கு 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 45 ஓவரில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு ஜெய்ஸ்வால் 61 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஆகினார்.

சுப்மன்கில் 44 ரன்கள் எடுத்து அவுட்டாக ரிஷப்பண்ட் 28 ரன்களுக்கும், துருவ் ஜுரல் 17 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஜடேஜா 22 ரன்களுக்கும், மானவ் சுதர் 4 ரன்களுக்கும் அவுட்டாக கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கேஷரா நுவந்தா வீசினார்.

Hey #Siraj won warm-up match with hat-trick sixes. #GauthamGambhir smile pic.twitter.com/jmmo6P3H98
— Studio Flicks (@StudioFlicks) August 10, 2026

ஹாட்ரிக் சிக்ஸர்:

அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த முகமது சிராஜ் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். பின்னர், அதற்கு அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 15 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து சிராஜ் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹாடரிக் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த முகமது சிராஜிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக சிராஜ் உள்ளார். பும்ரா காயத்தால் அவதிப்படும் தருணங்களில் தனி ஆளாக இந்திய அணியை பல முறை காப்பாற்றியுள்ளார்.

சிறந்த பந்துவீச்சாளர்:

முகமது சிராஜ் மிகப்பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிப்பவர் இல்லையென்றாலும் அவரது பலம் காரணமாக அவர் நல்ல ஹிட்டராக உள்ளார். இந்திய அணிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடும் முகமது சிராஜ் தொடர்ந்து சமீபகாலமாக இந்திய அணியில் இடம் முறையாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்.

அடுத்தாண்டு உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், முகமது சிராஜ் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகமது சிராஜ் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 46 போட்டிகளில் 140 விக்கெட்டுகளையும், 50 ஒருநாள் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 125 போட்டிகளில் 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks