அமைச்சர் கீர்த்தனா மாடர்ன் உடையில் இருந்ததாக வெளியான வீடியோவின் பின்னணியில் நடந்தது என்ன என்பதை மலேசியாவில் இருந்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா பற்றிய வீடியோ

கடந்த இரு தினங்கள் முன்பு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பற்றி வீடியோ ஒன்று வைரலானது. காரில் இருந்து மாடர்ன் உடையில் ஒரு பெண் இறங்கிய நிலையில் அது கீர்த்தனா தான் என சிலர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். ஆனால் அது தான் இல்லை, ஒரு பெண்ணின் உடையைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என கீர்த்தனா பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் அந்த வீடியோவில் இருந்த பெண் போலீசில் புகாரளித்து விட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னுடைய பெயர் வினுஷா. நான் ஏன் இந்த வீடியோ ஷேர் பண்றேன்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஏனென்றால் சமூக வலைத்தளத்தில் என்னுடைய வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.அது தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இந்த 2 நாட்களில் நடக்கும் விஷயம் யாவும் என்னை கடுமையாக பாதித்துள்ளது.

View this post on Instagram

A post shared by VINOSHA RAVI🧿🌑 (@nisha_ravi23)

அப்படி என்ன தப்பாக இருந்தது?

நான் என் காரில் இருந்து இறங்கும் வீடியோவில் என்ன தப்பாக இருந்தது என தெரியவில்லை. அதை ஒரு நபர் வீடியோ எடுத்து இந்தியாவில் இருக்கும் ஒரு பெண் அமைச்சரை குறிப்பிட்டு வீடியோவைப் பரப்புகிறார்கள். அவர்கள் அப்படி செய்யக் காரணம், அமைச்சர் இப்படி ஒரு ட்ரெஸ் போடலாமா என கேட்பதற்கு தான். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் தான். அந்த வீடியோவைப் பார்த்த எல்லாருக்கும் அது அமைச்சர் இல்லை என்பது தெரியும்.

அதேசமயம் மோசமான கமெண்டுகள், ட்ரோல் வீடியோ போட்டது எல்லாமே பார்த்தேன். இவை எதுவும் என்னை தடுக்கப் போவதில்லை. நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்பது உண்மை தான். எனினும் என் கணவர், குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் வீடியோவில் அணிந்த உடையை குறிப்பிட்டு நாகரீகமாக உடையணிய வேண்டும் என சொல்கிறார்கள். நான் என்ன தப்பா உடையணிந்து இருக்கிறேன். நான் வேலைக்குப் போகிறேன். அதற்கேற்றாற்போல தான் உடை அணிந்திருக்கிறேன். என்னையும், அமைச்சர் கீர்த்தனாவையும் பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள்.

நான் நியூஸ் சேனல்கள், சமூக வலைத்தளப் பிரபலங்கள் எல்லாரும் அந்த வீடியோ பதிவிட்டதைப் பார்த்து விட்டேன். இதற்குமேல் ரிப்போர்ட் செய்து அதனை நீக்க வேண்டும் என நினைக்கவில்லை. அமைதியாகவே கடந்து செல்ல விரும்புகிறேன். முதலில் நான் வீடியோவை ஜோக்காகவே கருதினேன். ஆனால் விஷயம் ரொம்ப சீரியஸான பிறகு தான் அதன் விபரீதத்தை புரிந்து கொண்டேன். அமைச்சர் கீர்த்தனா தரப்பும் இதுதொடர்பான சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நான் மலேசியா போலீசில் புகாரளித்துள்ளேன். தயவு செய்து அந்த வீடியோவை ஷேர் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article