Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்

Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
News Image

Hyderabad Class Room Viral Video: வீட்டு பாடத்தை செய்யாமல் வந்த 6 வயது சிறுவனை வகுப்பறையிலேயே ஆசிரியை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வகுப்பறையிலேயே உயிரிழந்த சிறுவன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது சிறுவன் திடீரென சுருண்டு விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு பாடத்தை முடிக்காததால் ஆசிரியை அடித்ததிலேயே சிறுவன் மரணித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். குடும்பத்தினர் தகவல்களின்படி, ஆசிரியை அடித்ததில் பயந்து குழம்பிப் போன மாணவன், அழுது இருமல் கொண்டு மயங்கி விழுந்துள்ளான். அதேநேரம், மாணவரின் மரணத்திற்கான உறுதியான காரணம் ஏதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மாணவனை தாக்கிய ஆசிரியை - சிசிடிவி காட்சிகள்

பள்ளி வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், “ஆசிரியை குழந்தையை ஆவேசமாக திட்டியுள்ளார். அதன்பிறகு, அக்குழந்தை அழத் தொடங்கி கெஞ்சுவது போலப் பதற்றத்துடன் தன் கைகளை அசைப்பதை காண முடிகிறது. பின்னர், ஆசிரியை அவனது சட்டையையும் ட்ரவுசரையும் சரிசெய்துவிட்டு கன்னத்தில் அறைந்துள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே அக்குழந்தை மயங்கி ஆசிரியரின் மடியில் சரிந்து விழுந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியை அமர்ந்தபடியே மாணவனை பிடித்து தூக்க முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தையிடம் எந்தவித உணர்ச்சியும் இல்லாத நிலை இருந்துள்ளது. உடனடியாக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

6 YEAR OLD DIES AFTER CLASSROOM ASSAULT !!!

Six year old Pranay Teja died after collapsing inside Little Garden School in Visakhapatnam on Thursday. His family alleges he was beaten by a teacher over unfinished homework. CCTV footage shows the teacher hitting the child before he… pic.twitter.com/e0G1cf37xG
— Ravi Prakash Official (@raviprakash_rtv) August 21, 2026

பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு..!

பள்ளியிலிருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், தனது மைத்துனரின் இடத்தில் பணிபுரிந்த உள்ளூர் சமையல்காரர்கள் மூலமாகவே இந்தச் சம்பவம் குறித்துத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் நடந்த நாளன்று பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்ற கருத்தையும் நிராகரித்ததோடு, ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காவல்துறை விசாரணை:

இயற்கைக்கு மாறான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மரணம் என, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 194-இன் கீழ் ஒரு ஆரம்பகட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய, அதிகாரிகள் பள்ளியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதால், மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்: Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்

ஆந்திரப் பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ”ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததைக் காண்பது இதயத்தை நொறுக்குவதாக” உள்ளது” என இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவரின் பெற்றோரிடம் பேசிய லோகேஷ், “குற்றவாளிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கிறோம். மன உறுதியுடன் இருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. எங்கள் அரசு எல்லா வகையிலும் உங்களுக்குத் துணை நிற்கும்” என உறுதியளித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks