தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சிக்கு முக்கிய அங்கமாக இருக்கும் விசிக-வின் எம்எல்ஏ-வாக வன்னியரசு அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளார்.

அவரது செயல்பாடுகளை பலரும் பாராட்டி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வன்னியரசு பேசியதாவது,

மறுநாளே பேசினேன்:

இந்த வெள்ளப்புத்தூர் கிராமத்தில் இவர்கள் தொடர்புடைய வீடியோவைத்தான் தம்பி பகிர்ந்தார். இரவே எனக்கு அனுப்பிவிட்டார்கள். உடனே நமது அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசச் சொல்லியிருந்தோம்.

பேசச் சொன்ன உடனே மறுநாளே வீடியோ காலில் நான் தொடர்பு கொண்டு பேசுகிறேன். இவர்கள் பிரச்சினை என்னவென்று கேட்டேன். நான் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேல் பழங்குடி, தலித் மக்களுக்கு மேலே நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்று நான் மலைகளில் போகும் வீடியோவைப் பார்க்கிறீர்கள். நான் 20 வருடமாக மலைகளில் போய்க் கொண்டிருக்கிறேன்.

78 ஆண்டுகளாகியும் அவலம்:

போகாத மலைகளுக்கு எல்லாம் போயிருக்கிறேன். அந்த மக்களைத் தேடித் தேடி நாங்கள் போறோம். என்ன பிரச்சினை என்று கண்டறிகிறோம். இவர்கள் எல்லாம் மண்ணின் மைந்தர்கள், பூர்வீக குடிகள். மண்ணின் மைந்தர்களுக்கு பட்டா இல்லை. படிப்பதற்கு சான்றிதழ் இல்லை. இதுதான் இந்த நாட்டின் அவலம்.

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிறது. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு சமூகம் மனை பட்டாவிற்காக கை ஏந்துகிறார்கள், சான்றிதழுக்காக கை ஏந்துகிறார்கள். நான் இதற்கு முன்னாடியும் கேட்டுள்ளேன். இவர்கள் என்ன சமூகம் கொடுங்கள் நாங்கள் சொல்றோம். எஸ்டி என்றால் எஸ்டி சான்றிதழ் கொடுங்கள் என்கிறோம். அதை அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள்.

முதலமைச்சர் அளித்த துணிச்சல்:

இந்து மலைக்குறவன், நரிக்குறவர், இருளர் என்று சான்றிதழ். நான் வந்த பிறகு சொன்னது என்னவென்றால், ஆந்த்ரோபோலாஜி வைத்து நீங்கள் ஆய்வு செய்யுங்கள், என்ன வேண்டுமென்றாலும் பண்ணுங்கள். அதை அடுத்தகட்டமாக செய்யுங்கள். 10ம் கிளாசில் இருந்து முதலில் போறாங்கள் என்றால், முதலில் சான்றிதழ் கொடுத்துவிட்டு பாருங்க என்று சொல்லிருக்கிறோம்.

இதை முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தனியாக சந்தித்து சொல்றோம். அவரிடம் இன்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று சொல்கிறோம். அவர் சொன்ன ஒரே வார்த்தை நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள், நான் உங்ககூட இருக்கிறேன் என்றார். அந்த துணிச்சலில்தான் நாம் செய்கிறோம்.

முதல்வர் வெளிப்படையாக ஆதரவு:

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரச்சினை இருக்கலாம். ஆனால், வாழ்றதே ஒரு பிரச்சினையா இருக்குது. நான் இந்த குடிமகனா இருக்க என்னவா நீங்க காட்டுவீங்க? அது ஒரு முக்கியமான பிரச்சினை. பழங்குடி சமூகத்தில் நிறைய வந்துருக்காங்க. அவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் செய்கிறோம். அதற்கு நமது அரசு, முதல்வர் வெளிப்படையாக ஆதரவு தருகிறார். ஊக்கப்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source: Read Full Article