TTV Dhinakaran : கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு.! கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு.? இறங்கி அடிக்கும் டிடிவி

TTV Dhinakaran : கும்பகர்ண தூக்கத்தில் தவெக அரசு.! கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு.? இறங்கி அடிக்கும் டிடிவி
News Image

தொடரும் கொலை சம்பவங்கள்

தமிழகத்தில் தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தவெக அரசு மீது குறம்சாட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள கொலை சம்பவங்களை பட்டியலிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சம்

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.

எந்தவிதக் கவலையும் இல்லாமல் முதலமைச்சர் விஜய்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர்  ஜோசப் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks