அமெரிக்க இலக்குகள் மீதான டெஹ்ரானின் தொடர் தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கோபமடையச் செய்துள்ளன. இதையடுத்து தனது ஆத்திரத்தை தனது சமூக வளைதள பக்கத்தில் கொட்டியுள்ள ட்ரம்ப், ஈரானை அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்றும் அது செத்துவிட்டது என்றும் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஈரான் குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு. அது செத்துவிட்டது. அவர்களிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, நாணயமும் இல்லை. அவர்களால் தங்கள் ராணுவ வீரர்களுக்கோ அல்லது காவலர்களுக்கோ ஊதியம் வழங்க முடியவில்லை. பணவீக்கம் 300% ஆக உள்ளது," என்று கூறியுள்ளார். மேலும், "அவர்களின் தலைமை முற்றிலும் சிதைந்துவிட்டது. அவர்களால் நாட்டை முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை," என்றும் ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவைப் பற்றி தவறான தகவல்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளன“

அதோடு, அமெரிக்காவைப் பற்றி அவர்களிடம் தவறான தகவல்கள் மட்டுமே உள்ளன என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் சொந்தப் போராட்டக்காரர்களைக் கொல்ல விரும்புகிறார்கள். இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு அர்த்தமற்ற விஷயங்களை பேசும் பழக்கமும் உண்டு.

“ஈரான் மீது அமெரிக்கா ஒரு வலுவான தாக்குதலை தொடுக்கும்“

இதனிடையே, அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா ஒரு வலுவான தாக்குதலை தொடுக்கும் என்று ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, "நாங்கள் அவர்களை பலவந்தமாகத் தாக்குவோம். நாங்கள் பதிலடி கொடுப்போம்," என்று ட்ரம்ப் கூறினார்.

மேலும், அமெரிக்க ராணுவம் இரவில் ஒரு ஏவுகணையை வான் பாதுகாப்பு அரண்களைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும், ஆனால் அது எதையும் தாக்கவில்லை என்றும் அவர் கூறினார். மீதமுள்ள ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்கான சில நம்பிக்கை இன்னும் உள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் சந்திக்க மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாடு ஏற்படும் என்று நம்ப முடியுமா என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் விதித்துள்ள தடைகள் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்று ட்ரம்ப் கூறினார்.

Source: Read Full Article