Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
News Image

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக 4 முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்

தென்மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் மிக முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 120 விரைவு ரயில்கள் வரை இயக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 442 மின்சார ரயில் சேவையும் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.  இதனால் ரயில் சேவைகள் தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அல்லது ரயில் சேவை ரத்துச் செய்யப்படும். அப்படியாக ஆகஸ்ட் மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ரயில் சேவையில் மாற்றம்

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூருக்குப் பதிலாக தற்காலிகமாக தாம்பரம், சென்னை கடற்கரை மற்றும் மாம்பலம் நிலையங்களில் இருந்து புறப்படும் அல்லது சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

மன்னார்குடி - சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 13 வரை இயக்கப்படும். இந்த ரயில் இரவு 10.50 மணிக்கு மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 14 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

திருச்சி - எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில் செப்டம்பர் 9 முதல் 15 வரையிலும்,  செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 14 வரையிலும் எழும்பூருக்குப் பதிலாக மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சியிலிருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

மும்பை சிஎஸ்எம்டி– எழும்பூர் இடையே இயக்கப்படும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12 முதல் 15 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

சேலம்– சென்னை எழும்பூர் அதிவேக விரைவு ரயில் செப்டம்பர் 12 முதல் 15ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக மாம்பலத்தில் தனது சேவையை நிறுத்தும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக எழும்பூர்–சேலம் அதிவேக விரைவு ரயில் செப்டம்பர் 13 முதல் 16 வரை இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும்.

செப்டம்பர் 16 முதல் 19 வரை மாம்பலம்–கோடம்பாக்கம் வழித்தடத்தில் தஞ்சாவூர் வரை இயகப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். அதேபோல் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 15 வரை 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை சரிபார்த்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks