தமிழ்நாடு முழுவதும் இன்று பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றன. அதில் மிக முக்கியமான 5 விஷயங்கள் பற்றிக் காணலாம்.

1. சட்டசபையில் வெடித்த மோதல்

தமிழக சட்டப்பேரவை இன்று வழக்கம்போல கூடியது. அப்போது அமைச்சர் நிர்மல்குமார் செந்தில் பாலாஜியை கரூர் கம்பெனி ஓனர் என குறிப்பிட்ட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிர்மல் குமாரை சங்கி அமைச்சர் என கூறினார். அதற்கு நிர்மல் குமார் 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என பதிலடி கொடுக்க சட்டப்பேரவை கலவரமானது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையீட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

2. நடிகை சௌகார் ஜானகி மரணம்

94 வயதான பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரனமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. 1950ம் ஆண்டு அவர் அறிமுகமான ஷவுக்கார் படத்தால் சௌகார் ஜானகி என அறியப்பட்டார்.70 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இயங்கி வந்த அவரின் மறைவு திரைத்துறையினருக்கு பேரிழப்பு என பலரும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜயும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

3. தொகுதி மறுவரையறை குறித்து விவாதம்

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை வேண்டாம் என நகலை எரித்த திமுக, எதிர்க்கட்சியாக மாறிவிட்டதால் நிலைப்பாட்டை மாற்றியது என அவர் கூற இரு கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதில் பாமக தொகுதி மறுவரையறையை ஆதரிக்க விசிக எதிர்ப்பு தெரிவிக்க பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.

4. எங்களுக்கு கார் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

சட்டப்பேரவையில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் மக்கள் பணி செய்ய கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்தார். இது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் கார் வாங்க மாட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களும் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். அதேசமயம் தவெகவில் கார் வைத்திருப்பவர்களும் கேட்க மாட்டார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார்.

5. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - ஜோயாலுக்காஸ் மாஸ்டர் பிளான்

தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த திட்டத்திற்கான டெண்டர் ஒப்பாந்தம் கோரப்பட்டுள்ளது. அதன்படி ஜோயாலுக்காஸ், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், வும்முடி பங்காரு ஜூவல்லர்ஸ், டைடன், மலபார், எமரெல்ட், கேடிஎம் ஜூவல்லர்ஸ் என பல நிறுவனங்கள் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து ஒப்பந்தம் கூறியுள்ளது. இதில் ஜோயாலுக்காஸ் நிறுவனம் 0.01 பைசாவுக்கு டெண்டரை கோரியுள்ளது.

Source: Read Full Article