TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
News Image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார்.

தமிழக வெற்றிக் கழக அரசு

2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் அவர் தலைமையில் கூட்டணி அமைச்சரவை அமைந்தது. இந்த நிலையில் 2026-2027-ம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இருந்தபோது நிதித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக கடந்த ஜூலை மாதம் முழுவதும் முதல்வர் விஜய் தலைமையில் பல்வேறு துறை வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினருரிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனைகள் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன இடம் பெற வாய்ப்பு?

சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு விதமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் என பல அறிவிப்புகளை தெரிவித்தது.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அரசு கஜானாவில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் தனக்கு கொஞ்சம் கால அவகாசம் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார். இப்படியான நிலையில் இன்றைய பட்ஜெட்டில் நிச்சயம் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ஒவ்வொரு துறை ரீதியாக தற்சமயம் தேவையான செயல்படுத்தக்கூடிய அளவிலான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் எனவும் அதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்கள் வரை உன்னிப்பாக கவனிக்கப்படும். இதன் காரணமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் நிலையில் முதலில் பொது பட்ஜெட்டும், நாளை வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இரு அமைச்சர்களும் புதியவர்கள் என்பதால் எப்படி பட்ஜெட் படிக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும், எங்க உவமைகள் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

இப்படியான நிலையில் நடிகையை அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். சட்டசபை கூட உள்ள நிலையில் அவரின் கைது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடும் நிலையில் காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை, மின்வெட்டு, எம்.எல்.ஏ.க்கள் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்க அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks