TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
News Image

சட்டசபையில் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடும் முன் அதன் எண்ணிக்கை என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சொன்ன சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மானியக்கோரிக்கை மீதான விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கூடிய நிலையில் அன்றைய நாளில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி சார்ந்த கேள்விகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 துறைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

அப்படியாக ஆகஸ்ட் 22ம் தேதியான நேற்று சட்டத்துறை, மின்சாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் ரமேஷ், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் பதிலளித்தனர்.

ஆரம்பம்  முதல் இறுதி வரை விறுவிறுப்பு

சட்டசபை நிகழ்வுகள் காலை வழக்கம்போல தொடங்கிய நிலையில் நிர்மல் குமார் vs செந்தில் பாலாஜி, நிர்மல் குமார் vs உதயநிதி ஸ்டாலின், ஆதவ் அர்ஜூனா vs உதயநிதி, ஆதவ் அர்ஜூனா vs கே.என்.நேரு என கருத்து மோதல் நிலவியது. ஒருகட்டத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடப்பதையெல்லாம் கண்டு அதிருப்தியடைந்தார். ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் அவையை கண்ணியத்தோடு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்றது. கடைசியில் அமைச்சர்கள் ரமேஷ், சிடிஆர் நிர்மல்குமார் இருவரும் துறை சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தொக்காக மாட்டிய சேகர்பாபு

இதனிடையே முன்னாள் திமுக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்நாள் தவெக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. சேகர்பாபு வைத்த கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் ரமேஷ் சரமாரியாக பதிலடி கொடுத்தார்.

அப்படியாக ஓரிடத்தில் சேகர்பாபு பேசும்போது, “ நீங்கள் இப்போது 106 அறிவிப்புகளை வெளியிட இருக்கிறீர்கள். அந்த அறிவிப்புகளை எல்லாம் எத்தனை நாட்களில் நிறைவேற்றப் போகிறீர்கள் என பார்ப்போம்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷை துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். அமைச்சர் ரமேஷ் தனது பேச்சை தொடங்கும் முன் காலையிலேயே எப்படி இதில் 106 அறிவிப்புகள் தான் இடம் பெற்றது என சேகர்பாபு சரியாக சொன்னார் என்ற யோசனை தான் எனக்கு வருகிறது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “106 அறிவிப்புகள் இருக்கிறது என முன்கூட்டியே புலனாய்வு செய்து தெரிந்துக் கொண்ட சேகர்பாபுவுக்கு அவர் கேட்ட கல்லூரி தொடர்பான அறிவிப்பும் உள்ளே இருக்கிறது என சொல்லாமல் விட்டு விட்டு போய்விட்டார்கள்” என கூறினார்.

தகவல் சொல்லும் அதிகாரிகள்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தாலும் அதிகாரிகள் சிலர் இன்னும் முந்தைய திமுக அரசுக்கு விசுவாசமாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. சோதனை நடத்த செல்வது தொடங்கி துறை ரீதியாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது வரை முந்தைய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனை சரிசெய்ய தவெக அரசு முயற்சித்து வரும் நிலையில் சேகர்பாபு இதெல்லாம் உண்மைதான் என்னும் அளவிற்கு சட்டசபையில் பேசியுள்ளார்.

காரணம், சட்டசபைக் கூட்டத்தொடரின் போது குறிப்பிட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களது மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடத்தி  அதன் முடிவில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். நிகழ்ச்சி நிரல் மட்டுமே அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும். ஆனால் அமைச்சர் என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியிடப்போகிறார் என்பது ரகசியம் காக்கப்படும். சட்டப்பேரவையில் தான் முதன்முதலாக வெளியிடப்படும். முன்னதாக அந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என யூகிக்க முடிந்தாலும் சரியாக 106 திட்டங்கள் என சேகர்பாபு சொன்னது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks