வருமானத்தை கொட்டும் டாஸ்மாக்

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நவ நாகரீக காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், டாஸ்மாக் நிர்வாகமும் புது, புது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெறும் வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து நேரில் சென்று வாங்கிக் கொள்ளும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் மதுபானர் ஆர்டர்

அந்த வகையில், மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற இணையதளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எனவே எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் மேப்பும் வழங்கப்படும். இதனையடுத்து அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மதுபான விற்பனை - ஆர்டர் செய்வது எப்படி? டாஸ்மாக் வெளியிட்ட வீடியோ https://t.co/wupaoCzH82 | #TASMAC #TNGovt #Liquor #Tamilnews #abpnadu pic.twitter.com/6jCok246nQ

— ABP Nadu (@abpnadu) August 6, 2026

ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி.?

இந்த புதிய திட்டமானது மதுப்பிரியர்கள் நீண்ட நேரம் மதுக்கடைகளில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் இணையதளத்தில் மதுபானம் வாங்குவது தொடர்பான வழிகாட்டு வீடியோவானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் இணையதளமான https://tasmace2e.in/ - க்குள் சென்று எந்த கடை என தேர்வு செய்ய வேண்டும், அடுத்ததாக எந்த வகையான மதுபானம் ஸ்டாக் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்த சரக்குகளை ஆர்டர் செய்ய வேண்டும்.

விளக்க வீடியோ வெளியிட்ட டாஸ்மாக்

மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபி சரிபார்க்கவும், அடுத்தாக பணத்தை செலுத்தி ஆர்டரை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக ரசீசை பெற்றுக்கொண்டு அதில் உள்ள கியூ ஆர் கோடை கொண்டு எந்த டாஸமாக் கடைக்கு ஆர்டர் செய்யப்பட்டதோ அங்கு சென்று ஸ்கேன் செய்து சரக்குகளை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக புக் செய்த சரக்குகளை அன்றைய தினம் இரவு 10 மணிக்குள் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் 10 ரூபாய் பிடித்தம் செய்து மீதி பணம் திரும்ப வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article