புதுச்சேரி : புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (05-08-2026, புதன்கிழமை) டவுன், முருகம்பாக்கம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகம் தடைபடும் என மின்துறை அறிவித்துள்ளது.

டவுன் மின்பாதை (Town feeder)

காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை

மின்தடை பகுதிகள்:

கடலூர் சாலை பகுதி

விடுதலை நகர் குடியிருப்பு (பகுதி)

வெள்ளாளர் தெரு

ஜெகதாம்பாள் தோட்டம்

பழைய மார்க்கெட் தெரு (பகுதி)

வன்னியபெருமாள் கோவில் தெரு

சாமிநாதப்பிள்ளை தெரு

போலீஸ் தெரு

சொக்கப்படையாட்சி தெரு

வாரகார தெரு

அப்பாவூ நாயக்கர் தெரு

வானக்கார தெரு

சிங்கிலி நாயக்கர் தெரு

வண்ணார வீதி

பாரதி மில் திட்டு & பாரதி மில் வீதி

பழைய மருத்துவமனை வீதி

மில்லேனியம் தெரு

அப்துல்கலாம் நகர் அரசு குவார்ட்டர்ஸ்

உடையார் தோட்டம்

அம்பேத்கர் சாலை (முழு பகுதி)

வான்ராப்பேட்டை (முழு பகுதி)

நேதாஜி நகர் 1, 2, 3

தமிழ்த்தாய் நகர்

அவ்வை நகர்

ஜெயராம் செட்டியார் தோட்டம்

எல்லையம்மன் கோவில் தோப்பு

ஜே.ஜே. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

முருங்கப்பாக்கம் மின்பாதை (Murungapakkam feeder)

காலை 11:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை

பாதிக்கப்படும் பகுதிகள்:

காக்காயந்தோப்பு

பவானி நகர்

ராஜீவ் காந்தி நகர்

மேட்டு தெரு

ஜீவரத்தினம் வீதி

வீராம்பட்டினம் தேரோடும் வீதி

துறைமுக சாலை (Harbour Street)

கப்பூர் கார்டன்

சோழபுரம்

சீனுவாசா கார்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பைக் கொண்டு தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறும், மின்சாரத் துறையின் இப்பராமரிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Source: Read Full Article