P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்

P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சி தமிழ்நாட்டில் அமைவதற்கு காங்கிரஸ் பக்கபலமாக அமைந்துள்ளது.

தவெக-வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆட்சியில் முதலமைச்சர் விஜய் பங்களிப்பு அளித்த பிறகு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பலரும் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

MLA-வாக இருந்திருக்கலாமோ?

இந்த சூழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் தமிழில் வரக்கூடிய தொலைக்காட்சிகளைப் பார்க்கிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடப்பதையும் பார்க்கிறேன். அமைச்சர்கள் பேசுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் பேசுகிறார். உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

Super ல்ல 👌👌🔥

தமிழ்நாடு சட்ட மன்றத்தை பார்க்கும் போது...
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை விட...
சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.....🔥 😍😍
-ப. சிதம்பரம் @TVKVijayHQ 🙏 pic.twitter.com/VJGGyj0FOs
— SUMI (@NSSumithra) August 30, 2026

சபாநாயகர் தீர்ப்பு சொல்கிறார். அதையெல்லாம் பார்க்கும்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதைக் காட்டிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நாடாளுமன்றத்தில் யாரும் பேசுவது கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்க மாட்டார்கள். அமைச்சர் பதில் சொல்லமாட்டார். உறுப்பினர்கள் பேசமாட்டார்கள். சபாநாயகர் தீர்ப்பு சொல்லமாட்டார்.  அனைவரும் உட்காருங்கள், உட்காருங்கள் என்று சொல்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏக்கப்பேச்சு:

தேர்தலுக்கு முன்பு திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைவதில் மிகவும் உறுதியாக இருந்தவரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மிகவும் முக்கியமானவர். ராகுல் காந்திக்கு இந்த கூட்டணியில் விருப்பம் இல்லாத போதிலும், சோனியா காந்தியின் மூலமாக இந்த கூட்டணியை உறுதி செய்தவர்களில் ப.சிதம்பரம் மிகவும் முக்கியமானவர் ஆவார்.

இந்த நிலையில், ப.சிதம்பரமே தமிழ்நாட்டில் எம்எல்ஏ-வாக இருந்திருக்கலாம் என்று ஏக்கமாக பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களே தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெரும் ஒத்துழைப்பு அளித்தனர். ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திமுக-வுடனும், மு.க.ஸ்டாலினுடனும் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.

இதனால், இவர்கள் பெரியளவு இந்த கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகியது. இருப்பினும், காங்கிரசுக்கு அரைநூற்றாண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் விஜய் அமர்த்தியதால் மூத்த தலைவர்கள் சிலர் இந்த கூட்டணியிலே நீடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks