Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
News Image

'வருகை இல்லா ஆவணப் பதிவு' திட்டம்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கவும் 'ஸ்டார் 3.0'என்ற புதிய மென்பொருள் மூலம் 'வருகை இல்லா ஆவணப் பதிவு' திட்டம் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில விற்பனையாளர்களிடமிருந்து  புதிதாக வாங்கப்படும் வீடு, மனை மற்றும் ஃபிளாட்களின் முதல் விற்பனைப் பத்திரங்கள் முற்றிலும் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படும்.

இந்த நிலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்த.லோகேஷ் தமிழ்செல்வன்  தலைமையில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளர்கள். வங்கியாளர்கள், மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும். வருகையில்லா பதிவு முறையை செயல்விளக்கக் காட்சி மூலம் விளக்கவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பத்திரப்பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் தலையீடு

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் லோகேஷ், தற்போது First Plot மற்றும் First Sale ஆகிய ஆவணப்பதிவுகள் இணையவழியில் கொண்டு வரப்படுகின்றன. இன்னும் படிப்படியாக அனைத்து விதமான பத்திரப்பதிவுகளையும் இணையவழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக, தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சந்தேகங்களையும், உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்து, படிப்படியாக இந்த முறை அமல்படுத்தப்படும். பத்திரப்பதிவுத்துறையில் இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை களைந்து, ஒரு வெளிப்படையான முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதிய நடைமுறைகளை நாம் செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆன்லைனில் பத்திர பதிவு செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

பத்திர பதிவு இணையதள உள்நுழைவு

கட்டுமான நிறுவனங்கள் அல்லது நில விற்பனையாளர்கள் தமிழ்நாடு பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnreginet.gov.in தங்களுக்கான பிரத்யேக லாகின் (Builder/Developer Login) கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் பதிவேற்றம் செய்தல்

வீடுகள் விற்பனை ஒப்பந்தம், சொத்து விவரங்கள், வில்லங்கச் சான்று மற்றும் வீடு வாங்குபவர் மற்றும் வீட்டை விற்பவர் விவரங்களை இணையதளப் படிவத்தில் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆதார் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு

ஆதார் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லத் தேவையில்லை. வீட்டை வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை உறுதிசெய்ய, அங்கீகரிக்கப்பட்ட L1 கைரேகை சாதனம், கருவிழி ஸ்கேனர் அல்லது வெப்கேம் மூலம் ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல்

முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணங்களை நெட் பேங்கிங், UPI அல்லது கார்டு மூலம் ஆன்லைனிலேயே செலுத்தும் வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ள்து.

சார்பதிவாளர் சரிபார்ப்பு

வீட்டின் ஆவணங்கள், சொத்து விவரங்கள், வில்லங்க சான்றிதழ் போன்ற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சார்பதிவாளர் ஆன்லைனில் பரிசீலிப்பார்.  ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், 30 நாட்களுக்குள் ஆன்லைன் மூலமாகவே பதிலளித்து நிவர்த்தி செய்யலாம்.

டிஜிட்டல் பத்திரம் பதிவிறக்கம்

சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்ட அசல் பத்திரமும் கட்டண ரசீதும் அன்றைய தினமே அல்லது அடுத்த வேலை நாளில் இணையதளத்தில் கிடைக்கும்.  பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்கள் வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks