சட்டப்பேரவையில் மக்களின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல் சாதி, மதம் பற்றி பேசுவது வேதனையாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் சட்டமன்றம் முழுமையாக நேரலை செய்யப்படுவதால் ஒவ்வொரு விஷயமும் கடைக்கோடி பொதுமக்களையும் சென்றடைகிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் பேசப்படும் நிகழ்வுகளை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்

சாதி, மதம் பற்றி பேசவா சட்டப்பேரவை?

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்றத்தில் இன்றைக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஒருவர் மாமாவை போய் கேளுங்கள் என்கிறார், இன்னொருவர் அப்பாவிடம் கேளுங்கள் என்கிறார். ஒருவர் நான் லஞ்சம் கொடுத்தேன் என சொல்கிறார். இதையெல்லாம் சொல்வதற்காக சட்டமன்றம் இருக்கிறது. யார் யாரெல்லாம் எந்த ஜாதி யார் யாரெல்லாம் எந்த மதத்தைச் சார்ந்தவர் இப்படி சொல்வதற்காக தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். உண்மையிலே ரொம்ப வேதனையாக இருக்கிறது.

அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இருந்த இந்த சட்டமன்றத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் பற்றி பேசப்பட வேண்டும். அதன் பிறகு தான் அனைத்தையும் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். இன்னொரு அமைச்சர் கிறிஸ்தவ மதத்தை தான் பின்பற்றுவோம் என கூறுகிறார். சபாநாயகரே நான் கிறிஸ்தவ வன்னியர் என சொல்கிறார். இதனை வாக்களித்த மக்கள் புரிந்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி கனவு பலிக்காது

தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது தொடர்பாகவும், அவருக்கு பிரதமர் ஆசை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் தெரிவித்தது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தியை பிரதமர் ஆவார் என்ற கனவு பலிக்காது என்பது அந்த காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியும். ராகுலுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவுடைய பிரதமராக வருவதற்கு அவருக்கு எந்தவித தவறும் கிடையாது. அவர்களுக்கு இத்தாலி நாட்டின் மீது தான் அக்கறை இருக்கும். இந்தியா மீது எப்போது மக்களை இருக்காது. அதனால்தான் சோனியா காந்தி வந்தே மாதரம் பாடலை பாடக்கூடாது என தடுத்து நிறுத்தினார். ராகுல் காந்திக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்றால் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் பொருளாகும் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article