MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
News Image

MRTC Metro: தெற்கு ரயில்வேயிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள சென்னை கடற்கரையிலிருந்து பரங்கி மலை வரையிலான வழித்தடத்தை மேம்படுத்த சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாம்.

கைமாறிய பீச் ஸ்டேஷன் டூ பரங்கிமலை வழித்தடம்

வேளச்சேரி - பரங்கி மலையை இணைக்கு ரயில் வழித்தடத்திற்கான பணிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்னை காரணமாக, இந்த பணிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படமால் இருந்தது. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி இந்த வழித்தடம் பயனபாட்டிற்கு வந்தது. இதனால் சென்னை கடற்கரையிலிருந்து பரங்கி மலை வரையிலான 23.98 கிலோ மீட்டர் நீளத்திற்கு தினசரி 100 மின்சார ரயில்கள் வரை இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு லட்சம் பேர் வரை தினசரி பயணித்து வருகின்றனர்.aஅனால், இந்த மேம்பால ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்புகள் தரமாக இல்லை என கூறப்படுகிறது. இரவு நேரங்களுக்கான மின் விளக்குகள், லிஃப்ட் வசதிகள் மற்றும் கழிவறை ஆகியவை போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இந்த மேம்பால ரயில் தடத்தை சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதி ரயில்வே வாரியம் முதற்கட்ட ஒப்புதல் கிடைத்தது. தொடர்ச்சியாக இதற்கு ரயில்வே அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரயில்வே டூ மெட்ரோ நிர்வாகம்:

ரயில் வழித்தடத்தை கைமாற்றுவதற்காக அதிகாரப்பூர்வ வரைவு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசிடையே கையெழுத்தாகியுள்ளது. இதில் நிர்வாக இணைப்பிற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு மற்றும் வருவாய் பங்கீடு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ஜுனன், “ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை கடற்கரை தொடங்கி பரங்கி மலை வரையிலான வழித்தடத்தில் தெற்கு ரயில்வே சார்பில் மின்சார ரயில்கள் தான் இயக்கப்படும். இந்த கால இடைவெளியில் மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளோம். அதன்படி, ஒவ்வொரு ரயில் நிலையமும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக வசதியாக மெருகேற்றப்படும்.

ரூ.6,000 கோடி - தாராளமான வசதிகள்..!

என்னென்ன வசதிகளை ஏற்படுத்துவது, எவ்வளவு செலவு ஆகும்? ரயில் நிலையங்களில் உட்புற மாற்றம், ஏசி லிஃப்ட், எஸ்கலேட்டர், கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்தம் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 6000 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பணிகளை மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசு வழியாக மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் இரண்டு அரசுகளின் நிதியுதவியோடு பணிகள் தொடரப்படும்.

மெட்ரோ இல்லை - ஏசி ரயில் சேவை..!

மேம்பால ரயில் வழித்தடம் அகல ரயி பாதை என்பதால் அதில் மெட்ரோ ரயில் இயக்க முடியாது. இதனால் புதிய ஏசி மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை பரங்கி மலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி மேம்பால ரயில் நிலைய வளாகங்களில் வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவையும் நிறுவப்பட உள்ளன. ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இணைப்பு சாலைகளை ஏற்படுத்துவதோடு, சிற்றுந்துகள், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளும் ஏற்படுத்தப்படும்” என அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?

பத்து ரூபாய் தான் டிக்கெட்..!

சென்னை கடற்கரை தொடங்கி பரங்கிமலை வரையிலான ரயில் சேவைக்கு தற்போது வெறும் 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்கப்படுவதால் இந்த சேவையின் ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வெகுவாக மேம்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை, அதை வரவேற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், மேம்படுத்தலுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் புதிய கட்டணம் நியாயமானதாகவும், நடுத்தர மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks