Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!

Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!
News Image

என்னுடைய மொழி உங்களுக்கு புரியவில்லை என்றால் செயலில் பேசிக்காட்டுவோம் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

இனிமேல் தான் சவால்

தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மரிய வில்சன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “அமைச்சர் பொறுப்பு என்பது ரொம்ப பொறுப்பு மிகுந்தது. நாங்கள் இப்போது திருத்தப்பட்ட பட்ஜெட்டை தான் தாக்கல் செய்தோம். இனி வரப்போகும் நாட்களில் தான் சவால் இருக்கிறது. அடுத்த 6, 7 மாதத்தில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் போட வேண்டியிருக்கும். முதலமைச்சர் விஜய் சொல்வது போல ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. சொல் அல்ல செயலில் அனைத்தும் இருக்க வேண்டும். மக்களும் என்ன தவறு கண்டுபிடிக்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் சரியாக செயல்பட்டால் அடுத்த வருடம் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் இன்னும் சிறப்பாக இருக்கும்.

60 நாட்களில் ரூ.15 ஆயிரம் கோடி வரவு

ஆட்சிக்கு வந்து 45 நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தோம். மக்களுக்கு அப்போது தான் ஒவ்வொருவர் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருப்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.13 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு தான் பட்ஜெட் தயார் செய்தோம். முதலமைச்சர் விஜய் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு விசாரித்தபோது தான் எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறது என்பது புரிந்தது. அதனை சரிசெய்ய அவர் பிரமாதமான ஐடியா கொடுத்தார்.

அமைச்சர்களுக்கு அதற்கேற்றாற்போல சிறப்பாக செயல்பட்டு ரூ.15 ஆயிரம் கோடியை 60 நாட்களில் அரசு கருவூலத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள். இதுமாதிரியான மறுசீரமைப்பு பணி மேற்கொண்டால் 2 ஆண்டுகளில் மாற்றம் நிச்சயமாக இருக்கும். கடன் மட்டுமே வாங்குவதில் அர்த்தமில்லை. வருவாயை பெருக்கும் வழியை மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை பார்க்காமல் தங்கள் வீட்டை மட்டும் பார்த்தார்கள். முதல்வர் விஜய் அப்படி கிடையாது.

தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்

நாங்கள் 3 துறையில் ஆய்வு மேற்கொண்டு விட்டோம். அறிக்கையை விஜயிடம் ஒப்படைத்து விட்டோம். அவர் சொல்லப்போகும் விஷயங்களைக் கேட்டு நிச்சயம் மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். என்னுடைய தமிழை சட்டசபையில் மட்டுமல்லாமல் பலரும் கிண்டல் செய்கிறார்கள். நான் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் தான் இருந்தேன். மாணவர்களிடம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் உரையாடுவேன். மேடை பரப்புரை என்பது எனக்கு புதிது. அதேசமயம் தமிழ் வாசிப்பு என்பது புதிது. நான் இப்போது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். மொழி என்பது ஒரு கருவி தான். நீங்கள் செயலில் பாருங்கள். அதை சமூக வலைத்தளத்தில் கேலியாக பேசுகிறீர்கள். என் மொழி உங்களுக்கு புரியவில்லை என்றால் செயல் பேசும் என மரிய வில்சன் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks