சட்டப்பேரவையில் தேவையில்லாமல் என் கணவர் பற்றி பேச வேண்டாம் என திமுகவினருக்கு அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சிக்கும்போதெல்லாம் திமுகவினர் லாட்டரி தொழிலை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தற்போது அந்த தொழிலில் ஈடுபடுவதில்லை என விளக்கம் கொடுத்து விட்டார். தொடர்ந்து திமுகவினர் அதனைப் பற்றி பேசுவது மார்ட்டினின் மனைவியும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லால்குடி தொகுதிக்காக கோரிக்கை

இதனிடையே நேற்று சட்டப்பேரவை முடிந்து அவர் செய்தியாளர்களை சந்திதித்தார். அப்போது பேசிய லீமா ரோஸ், “சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் லால்குடி தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைப்பதற்காக தான் நான் எழுந்தேன். அங்கு விவசாயம், அதன் சார்ந்த சிறு குறு தொழில்களின் மையமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். அதேபோல் லால்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய தொழில் முதலீடுகளையும், அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுள்ளேன்.பெண்கள், சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துதல் வேண்டும் எனவும் கேட்டுள்ளேன்” என கூறினார்.

என் கணவரைப் பற்றி ஏன் பேசுறீங்க?

தொடர்ந்து பேசிய அவர், இன்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது என் கணவர் லாட்டரி அதிபரான மார்ட்டின் பற்றி பேசினார். என் கணவர் வேறு மாநிலத்தில் தான் லாட்டரி விற்பனை செய்து வருகிறார். நாங்கள் எந்த அரசு வந்தாலும் சரியாக வரிகள் எல்லாம் கட்டி தான் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறோம். அண்ணா கொண்டு வந்த இந்த பிசினஸை என் கணவர் வழிநடத்தி வருகிறார். ஆனால் சட்டப்பேரவையில் லாட்டரி தொழிலைப் பற்றி பேசும்போது வேறு மாதிரி கொண்டு வருகிறார்கள்.

அந்த தொழிலைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு அரசியலுக்குள் இழுத்து பேசுகிறார்கள். அதைப் பற்றி பேசக்கூடாது. எந்த அமைச்சர் கேள்வி கேட்கிறாரோ, அதற்கேற்ற மாதிரி பதில் சொல்ல வேண்டியது தானே?.. நிதியமைச்சர் எழுப்பிய கேள்விக்கு என் கணவர் மார்ட்டினை இழுக்கிறார்கள். என்னுடைய மருமகன் ஆதவ் அர்ஜூனா லாட்டரி தொழிலில் இருந்து வெளியே வந்து விட்டார். அதனால் தேவையில்லாமல் இதைப்பற்றி பேச வேண்டாம்.

நாங்க சட்டப்படி தான் தொழில் பண்றோம்

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர் அனுமதி அளித்தால் நீங்கள் லாட்டரி விற்பனை மேற்கொள்ளலாம் என சொன்னார்கள். வருமான வரி உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் சரியாக செலுத்தி வருகிறோம். ஏதோ, நாங்கள் கள்ளத்தனமாக லாட்டரி விற்பதாக பேசுகிறார்கள். முறைப்படி தான் இந்த தொழிலை செய்கிறோம். அவர்கள் செய்த தவறை மறைக்க இந்த மாதிரி லாட்டரி லாட்டரி என சொல்கிறார்கள். அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article