காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை, வருகின்ற 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் நேரில் வருகை புரிந்து பயனடையலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகின்ற 31.08.2026 வரை நடைபெற உள்ளது. காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள்(Machinist) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், கணினி இயக்குபவர் (COPA) போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ள (Industry 4.0 TATA Technology) தொழில் 4.0 மைய தொழிற்பிரிவுகளான மேம்பட்ட அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) ஓராண்டு தொழிற்பிரிவுகளும் உள்ளன. மேற்கண்ட தொழிற்பிரிவுகளில், சேர மாணவர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையம்

மேலும், ”தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான” காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் வருகை புரிந்து சேர்ந்து கொள்ளலாம். அவ்வாறாக விண்ணப்பிக்க வருகைபுரியும் பொழுது மாணாக்கர்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10th), சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவை உடன் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்

அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.1750- இலவசமாக பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், மூடுகாலணிகள், பஸ்பாஸ் ஆகியவை பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவுனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.25,000- சம்பளத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். எனவே, ITI பயிற்சியில் சேர்ந்து பயனடைவீர். மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article