IND vs SL 2nd Test: தோல்வியின் பிடியில் இலங்கை.. அபார வெற்றி பெறுமா இந்தியா? கில் பாய்ஸ் மிரட்டல் பவுலிங்!

IND vs SL 2nd Test: தோல்வியின் பிடியில் இலங்கை.. அபார வெற்றி பெறுமா இந்தியா? கில் பாய்ஸ் மிரட்டல் பவுலிங்!
News Image

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஃபாலோ ஆன் ஆன இலங்கை:

தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் ஆகியோரின் அபாரமான சதத்தால் இந்தியா 503 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி ஃபாலோ ஆன் ஆகிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து இலங்கை ஆடியது.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கைக்கு லஹிரு உதாரா 3 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுக்க கமில் மிஷாராவுடன் சூர்யபண்டாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடியது. கமில் மிஷாரா 39 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

சூர்யபண்டாரா அபாரம்:

பின்னர், மென்டிசுடன் ஜோடி சேர்ந்த சூர்யபண்டாரா அபாரமாக ஆடினார். இருவரும் களத்தில் நிலைத்து நிற்பதையே கவனத்தில் கொண்டு ஆடினர். சிறப்பாக ஆடிய சூர்யபண்டாரா அரைசதம் விளாசினார். மென்டிசும் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். அபாரமாக ஆடிய இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார்.

கமிப்து மென்டிஸ் 92 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு, கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா களமிறங்கினார். இந்த ஜோடியும் களத்தில் நிலைத்து நிற்க முயற்சித்தது. சூர்யபண்டாராவுக்கு ஒத்துழைப்பு அளித்த கேப்டன் டி சில்வா 44 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தனி ஆளாக அணியைத் தாங்கிப் பிடித்து வந்த சூர்யபண்டாராவை மானவ் சுதர் அவுட்டாக்கினார். அவரது பந்தில் சூர்யபண்டாரா 173 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்சிலும் சூர்யபண்டாரா 80 ரன்கள் எடுத்தார்.

வெற்றி பெறுமா இந்தியா?

4வது நாளான இன்று 3வது செசன் வரை 222 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை ஆடி வருகிறது. இந்திய அணியைக் காட்டிலும்  10 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள இலங்கை இந்தியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயிப்பது சவாலாக உள்ளது.

இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகளே இல்லாத சூழலில், எஞ்சிய 4 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு நாளை முழுவதும் போராடினால் மட்டுமே ஆட்டத்தை டிரா செய்ய இயலும்.

இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் இந்திய அணியே வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெறும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks