IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
News Image

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது.

சுதந்திர தினத்தில் டெஸ்ட்:

இலங்கையின் காலே மைதானத்தில் இன்று காலை இந்த போட்டி தொடங்குகிறது. இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடும் நிலையில், இந்த போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சுதந்திர தின வெற்றியாக சமர்ப்பிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இலங்கை அணியைக் காட்டிலும் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும் இலங்கை அணிக்கு அவர்களின் சொந்த மைதானத்தில் ஆடுவது மிகப்பெரிய பலமாக அவர்களுக்கு உள்ளது.

எதிர்பார்ககப்படும் ப்ளேயிங் லெவன்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன்கில், துருவ் ஜுரல், ரிஷப்பண்ட், ஜடேஜா, மானவ் சுதர், குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா/ ப்ரார் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

இலங்கை அணியில் டி சில்வா தலைமையில் மதுஷ்கா, லஹிரு உதாரா, தினேஷ் சண்டிமால், மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, சோனல் தினுஷா, நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோர் ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது.

முடிவு நிச்சயம்:

இந்த மைதானத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 27 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. அதில் ஒரே ஒரு போட்டி மட்டுமே டிரா ஆகியுள்ளது. எஞ்சிய அனைத்து போட்டிகளுக்கும் முடிவு கிட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்திய அணி கடைசியாக ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு காலேவில் இ்லங்கை அணி வெற்றி பெற்ற பிறகு, தற்போது வரை அவர்கள் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவில்லை.

மழை வாய்ப்பு:

போட்டியின்போது அவ்வப்போது மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனாலும், அது போட்டியை பெரியளவு பாதிக்காது என்றே கருதப்படுகிறது. காலே மைதானத்தில் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. முதலில் ஆடிய அணி 29 போட்டிகளிலும், இரண்டாவது பேட் செய்த அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் சராசரியாக 375 ரன்களும், 2வது இன்னிங்சில் சராசரியாக 312 ரன்களும், 3வது இன்னிங்சில் சராசரியாக 239 ரன்களும், 4வது இன்னிங்சில் சராசரியாக 154 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இலங்கை அணி அயர்லாந்திற்கு எதிராக 704 ரன்கள் எடுத்தேத அதிகம். குறைந்தபட்சமாக தென்னாப்பிரிக்காக 73 ரன்களுக்கு சுருண்டதே குறைந்த ரன்கள் ஆகும். 344 ரன்களை பாகிஸ்தான் அணி எட்டிப்பிடித்ததே அதிகபட்ச சேசிங் ஆகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks