இலவச அரிசிக்கு eKYC கட்டாயம்! ஆகஸ்ட் 8, 9ல் தமிழ்நாடு ரேஷன் சிறப்பு முகாம்!

இலவச அரிசிக்கு eKYC கட்டாயம்! ஆகஸ்ட் 8, 9ல் தமிழ்நாடு ரேஷன் சிறப்பு முகாம்!
News Image

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி கார்டு வைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. இத்துடன் மானிய விலையில் எண்ணெய், சர்க்கரை , பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி முடிக்க வேண்டும்.

ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்து கேஒய்சி அப்டேட் செய்தால் மட்டுமே இனி ரேஷனில் பொருளே வாங்க முடியும். ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது தொடர்பாக தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதமே இதற்கான கெடு முடிந்துவிட்ட நிலையில் கேஒய்சி முடிக்காதவர்களுக்கு தமிழக அரசு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்த இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணி முடிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே கேஒய்சி செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் பதிவு செய்ய இந்த முகாம்களை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் தான் இந்த முகாம்கள் நடக்கின்றன. எனவே தொடர்ந்து ரேஷனில் பொருட்களை தடையின்றி வாங்க வேண்டும் குறிப்பாக 35 கிலோ அரிசி தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களும் கட்டாயம் இந்த முகாமில் கலந்து கேஒய்சி முடிக்க வேண்டும். உங்களின் ரேஷன் கடைக்கு சென்றாலே கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டுமா குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் கேஒய்சி நிலுவையில் இருக்கிறது என்பதை தெரிவித்துவிடுவார்கள். தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்திலும் கை விரல் ரேகை பதிவு மூலம் கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks