இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சொந்தமாக தொழில் தொடங்கவும் பயிற்சிகள் வழங்கியும் மானிய உதவி தொடர்பான விளக்கமும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நவீன காலத்தில் ட்ரோன் மூலம் வீடியோக்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. விவசாயம் முதல் திரைப்படங்கள் வரை ட்ரோன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் லட்சத்தில் சம்பாதிக்க ட்ரோன் தொழில்நுட்பம் கை கொடுத்து வருகிறது.

"மீடியா ட்ரோன் பயிற்சி"

இந்த நிலையில் தமிழக அரசினதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக மூன்று நாள் "மீடியா ட்ரோன் பயிற்சி" வழங்கப்படவுள்ளது இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மீடியா ட்ரோன் பயிற்சி' வரும் 18.08.2026 முதல் 20.08.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள்

ட்ரோன் தொழில்நுட்பம் - அறிமுகம்

ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள்

வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் - அறிமுகம்

FPV சினிமாடோகிராஃபி

DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு

மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு.
செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள்.
ஆவணப்பட தயாரித்தல்.
விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங்.
கார்ப்பரேட் திரைப்படங்கள்.
யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம்.
காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு.
நிகழ்ச்சி செய்தி களிப்பு.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை.
ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல்.
தொழிற்துறை புகைப்படம்.
காடு மற்றும் விலங்கியல் புகைப்படம்.
தீ மற்றும் மீட்பு பணிகள்.
அரசுத் திட்டங்கள்.

கல்வித்தகுதி என்ன.?

மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப் பயிற்சியில் ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032. இந்த பயிற்சியின் முடிவில் அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article