Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
News Image

Donald Trump Escort: வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் முதலில் ஏறிய ட்ரம்ப், பின்பு ரகசியமாக வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ட்ரம்புக்கு கொலை மிரட்டல்

ஈரானிடமிருந்து படுகொலைக்கான அச்சுறுத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்காராவில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பிறகு, விமான நிலைய உணவு வழங்கும் லாரி மூலம் ஒரு சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரகசியமாக துருக்கியிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்

துருக்கியில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, ட்ரம்ப் முதலில் கேமராக்களின் முன்னிலையில், பழைய இளநீல நிற ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.
ஆனால், விமானத்தில் ஏறிய பிறகு, விமான நிலைய உணவு வழங்கும் லாரி ஒன்று மூலம் அவர் ரகசியமாக விமானப்படையின் சி-32ஏ விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த விமானம் பின்னர் அவரை பிரிட்டனுக்குக் கொண்டு சென்றதாக, 'தி போஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் பயணம் - பாதுகாப்பு அச்சுறுத்தல்

ஈரானுடனான மோதல்கள் தீவிரமடைந்து வந்த வேளையில் இந்த அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஈரானானது துருக்கியுடன் தனது நாட்டு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அங்குதான் ட்ரம்ப் நேட்டோ உச்சி மாநாட்டிற்காக பயணம் செய்திருந்தார். மேலும், கத்தார் நன்கொடையாக வழங்கிய, புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட ஒரு ஜெட் விமானத்தில் தனது முதல் சர்வதேசப் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். அங்காராவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப் புதிய விமானத்திலிருந்து பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு திடீரென மாறியது,  கத்தார் நன்கொடையாக வழங்கிய அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

ட்ரம்ப் சொன்னது என்ன?

இதனிடையே, அங்காராவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப் வெளியிட்டு இருந்த சமூக வலைதள பதிவில்,  ”பிரிட்டனில் உள்ள ஆர்ஏஎஃப் மில்டன்ஹாலுக்குப் பறந்து செல்ல, பழைய நினைவுகளுக்காக பழைய இளநீல நிற ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், அதே சமயம் அங்கு பணியில் உள்ள அமெரிக்கப் படை வீரர்கள் தளத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் புதிய விமானமும் அதே தளத்தில் நிறுத்தப்படும்” என்றும் ப்குறிப்பிட்டு இருந்தார்.

க்ளிண்டன் வரிசையில் ட்ரம்ப்..!

ஆனால், கேமராக்கள் முன்னிலையில் ட்ரம்ப் பழைய விமானத்தில் ஏறிய பிறகு, விமான நிலைய உணவு வழங்கும் லாரி ஒன்றைப் பயன்படுத்தி அவர் ரகசியமாக சி-32ஏ விமானத்திற்கு மாற்றப்பட்டாராம், டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த நம்பகமான தகவல் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். இதேபோன்ற ஒரு நடவடிக்கை 2000-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்போது. அதிபர் பில் கிளிண்டன், தனது அதிகாரப்பூர்வ ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு திசைதிருப்பலாக அனுப்பிவிட்டு, அடையாளம் தெரியாத ஒரு நிர்வாக ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?

ஊடகவியலாளர்களிடம் உண்மையை மறைத்த ட்ரம்ப்

இதனிடையே, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்புடன் பயணம் செய்வதற்காக் தயாராக் இருந்த பத்திரிகையாளர்கள், தங்கள் அறையில் உள்ள ஜன்னல் திரைகளை மூடியே வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் அதிபர் விமானத்தில் இருந்தனராம்.  ட்ரம்ப் பயணித்த சி-32ஏ விமானம் இரவு சுமார் 10:20 மணியளவில் பிரிட்டனை வந்தடைந்தது என்றும், சில நிமிடங்களுக்குப் பிறகு பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமும் ஊடகவியலாளர்கள் உடன் அங்கு வந்தடைந்துள்ளது. அதேநேரம், சி-32ஏ விமானத்திலிருந்து பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு டிரம்ப் எவ்வாறு மாற்றப்பட்டார் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks