பட்ஜெட் மீதான சட்டசபைக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று கடந்த ஆட்சியில் விவசாயிகள் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசினார்.

இந்த சூழலில், அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக திமுக ஐடி விங் இன்று பதிலளித்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

புள்ளிவிவரம்:

தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!

தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:

சேமிப்புத் தளங்கள்:

ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!

தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!

தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:

ரூ.825 கோடி மதிப்பீட்டில்… pic.twitter.com/fcsQcuWHPs

— DMK IT WING (@DMKITwing) August 10, 2026

ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!

நேரடி கொள்முதல் நிலையங்கள்:

ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டன!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

மெட்ரிக் டன் நெல் கொள்முதல்:

2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து கடந்த கால ஆட்சிக்கும், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source: Read Full Article