Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
News Image

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. தற்போது நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இந்த தொடரில் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.

3வது இடத்திற்கு தடுமாறும் இந்தியா:

இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறது. இந்திய அணி சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் மோசமாகவே ஆடி வருகிறது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தில் சுப்மன்கில் ஆடி வருகிறார்.

3வது இடத்தில் புஜாரா ஆடுவார். அவருக்கு பிறகு தற்போது வரை இந்திய அணி 3வது இடத்திற்கான சிறந்த வீரரை கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறி வருகிறது. அதற்காக சாய் சுதர்சனை களமிறக்கி ஆடி வருகின்றனர். அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த சூழலில், இலங்கைத் தொடருக்கு முன்பு அவர் காயத்தில் சிக்கியிருப்பதால் அவர் இந்த தொடரில் ஆடுவதில் கேள்வி எழுந்துள்ளது.

படிக்கலுக்கு பொன்னான வாய்ப்பு:

இதனால், அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர் கொழும்புவில் நடந்த  பயிற்சி போட்டியில் 164 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 142 ரன்களை விளாசினார். 26 வயதான தேவ்தத் படிககல் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 90 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்துள்ளார். 2022ம் ஆண்டு அவர் கடைசியாக பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

அதன்பின்பு, கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத தேவ்தத் படிக்கல்லுக்கு இந்த தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் நீண்ட காலத்திற்கு 3வது இடத்தை ஆக்கிரமிக்கும் அரிதான வாய்ப்பை படிக்கல் பெறலாம். கிடைத்த வாய்ப்பை தேவ்தத் படிக்கல் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வாரா? தன்னை ஒரு அடுத்த நட்சத்திரமாக உருவாக்கிக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

3 வடிவத்திலும் அசத்தும் வீரர்:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என 3 வடிவங்களிலும் ஆடும் ஆற்றல் கொண்டவராக திகழும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினால் 3 வடிவ போட்டியிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்வார் என்று கருதப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு மிக மிக முக்கிய காரணமாக தேவ்தத் படிக்கல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதான படிக்கல் 90 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 89 இன்னிங்சில் 2 ஆயிரத்து 2270 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்துள்ளார். 4 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks