மக்களுக்கு சேவை செய்யாமல் அமைச்சர் பதவியில் கெத்து காட்டலாம் என நினைத்தால் யோசிக்காமல் தூக்கி எறிந்து விடுவேன் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர் விஜய் பாலாகி தெரிவித்துள்ளார்.

தவெக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒரு ரூபாய் பணம் வாங்காமல் தளபதி விஜய் மேல் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தது தான் மாற்றம். இந்த பகுதியில் என்னுடைய கால் படாத இடமே இல்லை. மக்களின் பிரச்னைகள், தினம் தினம் சந்திக்கக்கூடிய சிரமங்களை கூட இருந்து பார்த்திருக்கிறேன். நானும் அதை அனுபவித்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய் என்மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்து கொடுத்த வாய்ப்பை மக்கள் சரியாக வாக்களித்து காப்பாற்றியுள்ளார்கள். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்தும் செய்யப்படும். பெரியார், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் பெயர்களை, அவர்களைப் பார்க்காவிட்டாலும் உச்சரிக்காதவர்களே இல்லை. அதைப்போல தான் இன்னும் 100 வருடத்திற்கு தமிழ்நாடே பேசும் அளவுக்கு விஜயின் 5 ஆண்டுகால ஆட்சி நடக்கும்.

எனக்கு அமைச்சர்களை விட மக்கள் தான் முக்கியம். நான் நினைத்தால் 5 நிமிடங்களில் உங்களை தூக்கி எறிந்து விடுவேன். என்மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். நீங்கள் அமைச்சர்களான நிலையில் மக்களுக்கு சேவை செய்யவே இந்த பதவி, தனிப்பட்ட முறையில் கெத்து காட்ட இல்லை என முதலமைச்சர் விஜய் அமைச்சரவை கூட்டத்தில் திரும்ப திரும்ப சொல்லுவார். மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் அந்த திட்டங்களை தயங்காமல் யாருக்கும் பயப்படாமல் செய்யுங்கள் என சொல்லுவார்.

ஆட்சி மாறிடுச்சி, மக்கள் மாறிட்டாங்க.. அரசியல்வாதிகள் மாறி விட்டார்கள். அரசு அதிகாரிகளும் மாறி வருகிறார்கள். பணம் சம்பாதிப்பதை விட மக்களுக்கு தேவையானதை செய்யும் சேவையை நோக்கி தான் எங்கள் பயணம் உள்ளது. எங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு செய்வோம்.

நான் ரேஞ்ச் ரோவர் கார் வாங்கி மாட்டு கொட்டகையில் நிறுத்தி வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் ஆண்டுக்கு 10 ரேஞ்ச் ரோவர் கார்கள் தான் விற்கும். அதனை யார் வாங்கியிருக்கிறார்கள் என தெரிந்தால் அமைச்சர் மாட்டி விடுவார் எனவும் கூறுகிறார்கள். ஒன்றும் பிரச்னையில்லை. மாட்டுக்கொட்டகையில் நிற்கும் காரை நீங்கள் தவெக பெயரை சொல்லி ஓட்டி மகிழுங்கள்.

பெரிய கனவோடு நாங்கள் சட்டசபைக்கு சென்றோம். ஆளுமைமிக்க தலைவர்களைப் பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது. மக்களுக்கு என்னவெல்லாம் முடிந்தவரை செய்ய முடியுமோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. சீரியல் பார்த்துக் கொண்டிருந்தவர்களை இன்றைக்கு சட்டமன்றத்தைப் பார்க்க வைத்தவர் நம் முதலமைச்சர் விஜய். இதுவும் ஒரு மிகப்பெரிய மாற்றம் தான். இப்போது மானியக்கோரிக்கை நடந்து வருகிறது என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article