CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
News Image

CM Vijay Tamil Thai Vaazhthu: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்பாக அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதாம்.

தமிழ்த்தாய் வாழ்த்து - தனி தீர்மானம்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு, தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடுவதைக் கட்டாயமாக்கும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை பகிர உள்ளனர். இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம்:

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்படுவதும், சில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதும் தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக முன்மொழியப்பட உள்ள தமிழ்நாடு அரசின் தீர்மானம், ”தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதையைப் பிரதிபலிக்கிறது. 'தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் மரியாதை செலுத்தும் ஒரு வெளிப்பாடு என்பதை இந்த சபை வலியுறுத்துகிறது. இது, தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தைப் பேணுவதற்கான உரிமையை வலியுறுத்துவதோடு, இந்திய அரசியலமைப்பால் உறுதிசெய்யப்பட்ட மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் மேலும் வலியுறுத்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளதாம். மேலும், தமிழ்நாட்டில் நடைபெறும் அலுவல் நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு முயல்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு:

மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891இல் எழுதப்பட்ட மனோன்மணீயம் எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, 1970 நவம்பர் 23ம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மாநிலப் பாடலாக இதற்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்: TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks