CM Vijay: தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் நியமனங்களுக்கு முதலமைச்சர் நேரடியாக ஒப்புதல் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசமைப்பில் மிகவும் அதிகாரமிக்க பதவிகளாக கடுதப்படும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோரை நியமிக்க, இதுநாள் வரை ஆளுநரின் முன் அனுமதி பெறுவது நடைமுறையாக இருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக இனி வரும் காலங்களில் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு பதவிகளை நிரப்புவதற்கான உத்தரவுகளையும், ஆளுநரின் அனுமதி இல்லாமல் தமிழ்நாடு அரசால் நேரடியாகவே பிறப்பிக்க முடியும். தலைமைச் செயலாளர் பிறப்பித்டுள்ள இந்த உத்தரவு, 1978ம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணி விதிகளின்படி அரசு ஊழியர்கள் நியமன செய்யப்படும் விதியை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. 2022 முதல் 2025 வரை மற்றும் கடந்த ஜனவரி மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து பழைய நிலையான உத்தரவுகளையும் புதிய உத்தரவு ரத்து செய்துள்ளது.

ஆளுநர் பவர் கட் - அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய்

அரசாணையின்படி, ”அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அனைத்து கோப்புகளும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். சட்ட அலுவலர்கள் நியமனத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

இதுபோக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள், விசாரணைத் தொடக்கம், விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புதல் முதல் இறுதி உத்தரவு பிறப்பிப்பது வரை அனைத்து நிலைகளிலும் முதலமைச்சரின் நேரடி ஒப்புதல் பெறப்பட வேண்டும்” எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிர்வாக அமைப்பில் முதலமைச்சரின் அதிகாரத்தை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சி மற்றும் நிர்வாகச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்

அதிகாரிகளை நெறிப்படுத்த நடவடிக்கை?

60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் பல அதிகாரிகள் முந்தைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், லஞ்சம் வாங்கக் கூடாது என்ற கடுமையான நெருக்கடியால் தவெக அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகிறது. சில துறைகளின் செயலாளர்கள் அமைச்சர்களை மதிப்பதை இல்லை எனவும், அமைச்சரின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான், அதிகாரிகள் மீதான ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரத்தையும் முதலமைச்சர் தனது வசம் மாற்றியுள்ளார். இதனால், அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது இனி அதிரடி நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article